Independence Day 2022 : 75-வது சுதந்திர தின ஸ்பெஷல்... மனதைக் கவரும் சுதந்திர தின வாழ்த்துக்கள் இதோ

First Published Aug 15, 2022, 8:23 AM IST

Independence Day 2022 : நாட்டின் 75-வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில், அதற்காக நாம் எவ்வாறு வாழ்த்து தெரிவிக்கலாம் என்பதைப் பற்றி இந்த தொகுப்பில் காணலாம். 

இந்திய நாட்டின் 75-வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. நம் நாட்டிற்கு கடந்த 1947-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ந் தேதி சுதந்திரம் கிடைத்தது. ஆங்கிலேயரின் கொடுங்கோல் ஆட்சியை எதிர்த்து போராடி உயிர் தியாகம் செய்து சுதந்திரம் பெற்றுத்தந்த தியாகிகளை போற்றும் விதமாக இந்த சுதந்திர தினமானது கொண்டாடப்படுகிறது.

இந்த ஆண்டு இந்தியாவின் 75-வது சுதந்திர தினம் என்பதால் மத்திய, மாநில அரசுகளின் சார்பில் பல்வேறு விழாக்களும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன. குறிப்பாக நம் பாரத பிரதமர் மோடி, அனைவரும் தங்களது இல்லங்களில் தேசியக் கொடியை ஏற்றுமாறு வேண்டுகோள் விடுத்திருந்தார். இதனை ஏற்று இந்தியா முழுவதிலும் உள்ள மக்களும், திரையுலக பிரபலங்களும் தேசியக் கொடியை ஏற்று தங்களது தேசப்பற்றை வெளிப்படுத்தினர்.

சுதந்திர தினம் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில், அதற்காக நாம் எவ்வாறு வாழ்த்து தெரிவிக்கலாம் என்பதைப் பற்றி இந்த தொகுப்பில் காணலாம். அதன்படி நாம் செல்போனில் பெரும்பாலும் பயன்படுத்தும் செயலிகளில் ஒன்று வாட்ஸ் அப். அதன்மூலமே சுதந்திர தின வாழ்த்துக்களை உங்களது உறவினருக்கோ, நண்பர்களுக்கோ, அல்லது உடன் பணியாற்றுபவர்களுக்கோ அனுப்பலாம்.

இதற்காக வாட்ஸ் அப்பில் ஏராளமான வாழ்த்து துணுக்குகளும் இடம்பெற்று உள்ளன. அவற்றின் மூலம் தங்களுக்கு விருப்பமானவர்களுக்கு தங்களது சுதந்திர தின வாழ்த்துக்களை அனுப்ப முடியும்.

இதையும் படியுங்கள்... Independence Day 2022 : 75-வது சுதந்திர தின ஸ்பெஷல்... தமிழ் சினிமாவில் இடம்பெற்ற டாப் 5 தேசபக்தி பாடல்கள் இதோ

“சுதந்திர போராட்ட தியாகிகளை இந்நாளில் நினைவு கூறுவோம், இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்”

“நம் தேசம் இந்திய தேசமே... நம் மக்கள் இந்திய மக்களே... அனைவரும் ஒன்றுபட்டு செயல்படுவோம். வந்தே மாதரம். சுதந்திர தின வாழ்த்துக்கள்”

“நீ சுவாசிக்க, நேசிக்க உனக்கென ஒரு நாடு, விடுதலை உணர்வோடு அதை கொண்டாடு. அனைவருக்கும் இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்”

“கத்தியின்றி, இரத்தமின்றி, ஆங்கிலேயருக்கு எதிராக யுத்தம் செய்து பெற்ற சுதந்திரம் இது! இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்”

“உதிரங்களை உரமாக்கி உதித்த சரித்திரம் நம் சுதந்திரம்... அனைவருக்கும் இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்”

“அகிம்சையால் கிடைத்த சுதந்திரத்தை இனம், மொழி கடந்து நேசிப்போம், சுதந்திர காற்றை சுவாசிப்போம். சுதந்திர தின வாழ்த்துக்கள்”

“சாதி, மத பேதமின்றி நம் தேசத்தை நேசிக்கும் நம் மக்கள் அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள்”

click me!