கூகுள் மேப்ஸ் வழிகாட்டுதலைப் பின்பற்றிச் சென்ற ஒரு பெண், தனது காரை நவி மும்பையில் உள்ள ஒரு பள்ளத்தில் இறக்கிவிட்டார். கடல் பாதுகாப்பு அதிகாரிகள் அவரை பத்திரமாக மீட்டனர்.
கூகுள் மேப்ஸ் வழிகாட்டுதலைப் பின்பற்றிச் சென்ற ஒரு பெண், தனது காரை தவறுதலாக நவி மும்பையில் உள்ள ஒரு பள்ளத்தில் இறக்கிவிட்டார். இந்தச் சம்பவம் வெள்ளிக்கிழமை காலை, அவர் பேலாப்பூரில் இருந்து உல்வேவுக்குச் சென்று கொண்டிருந்தபோது நிகழ்ந்தது.
பேலாப்பூரில் உள்ள பே பாலத்தின் வழியாகச் செல்ல வேண்டிய அப்பெண்ணை, கூகுள் மேப்ஸ் பாலம் அடியில் உள்ள ஒரு பாதை வழியாக - அதாவது துருவதாரா ஜெட்டிக்குச் செல்லும் வழியாக - வழிநடத்தியுள்ளது. இதனை அறியாமல், அவர் கூகுள் மேப் வழிகாட்டலைப் பின்பற்றிய தொடர்ந்து சென்றுள்ளார். சில நிமிடங்களுக்குப் பிறகு, அப்பெண் காரை தண்ணீருக்குள் விட்டுவிட்டார்.
24
நவி மும்பை கார் விபத்து
இந்த விபத்தை நேரில் கண்ட கடல் பாதுகாப்பு அதிகாரிகள், உடனடியாக அப்பெண்ணை பள்ளத்திலிருந்து வெளியே இழுக்கும் பணியில் ஈடுபட்டனர். தண்ணீரில் மிதந்து கொண்டிருந்த அவரை சில நிமிடங்களுக்குள்ளேயே மீட்டனர். அவருக்கு எந்த காயமும் ஏற்படவில்லை. அவரது காரும் பள்ளத்திலிருந்து வெளியே எடுக்கப்பட்டது.
ஒரு காணொளி, அதிகாரிகள் ஒரு வெள்ளைக் காரை கிரேன் மூலம் பள்ளத்திலிருந்து வெளியே இழுப்பதைக் காட்டுகிறது.
கூகுள் மேப்ஸ் மக்களை தவறாக வழிநடத்தி, சில சமயங்களில் சோகமான விபத்துக்களை ஏற்படுத்தியது இது முதல் முறையல்ல.
34
தொடரும் கூகுள் மேப் விபத்துகள்
கடந்த ஆண்டு, பரேலியில் இருந்து பதாயுன் மாவட்டத்தில் உள்ள தட்டகஞ்ச் நோக்கிச் சென்று கொண்டிருந்த கார், கூகுள் மேப்ஸ் மூலம் வழிநடத்தப்பட்டு, ஃபரித்பூரில் சேதமடைந்த பாலத்தின் மீது ஏறி 50 அடி கீழே ஓடும் ஆற்றில் பாய்ந்து மூன்று பேர் உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து பதிலளித்த கூகுள், விசாரணையில் அதிகாரிகளுக்கு உதவுவதாக உறுதிப்படுத்தியது. "மறைந்த குடும்பங்களுக்கு எங்கள் ஆழ்ந்த இரங்கல்கள். நாங்கள் அதிகாரிகளுடன் நெருக்கமாக பணியாற்றி வருகிறோம் மற்றும் இந்த பிரச்சினையை விசாரிக்க எங்கள் ஆதரவை வழங்குகிறோம்," என்று அது கூறியது.
மற்றொரு சம்பவத்தில், கேரளாவில் கூகுள் மேப்ஸை பின்பற்றிச் சென்ற ஹைதராபாத்தைச் சேர்ந்த ஒரு சுற்றுலாப் பயணிக் குழு, பெருக்கெடுத்து ஓடிய ஆற்றுக்குள் காரை செலுத்தியது. அதிகாரிகளின் கூற்றுப்படி, கனமழை காரணமாக ஆற்றில் இருந்து வழிந்த நீர் அவர்கள் பயணித்த சாலையை மூடியிருந்தது. அப்பகுதி சுற்றுலாப் பயணிகளுக்கு அறிமுகமில்லாததால், கூகுள் மேப்ஸைப் பயன்படுத்தி வழிசெல்லும்போது அவர்கள் நேராக நீர்நிலைக்குள் காரை செலுத்திவிட்டனர். நான்கு பேரும் காயமின்றி தப்பினர்.