ரயில் டிக்கெட் வாங்கும்போது இதெல்லாம் இலவசமாக கிடைக்கும்! யூஸ் பண்ணிகோங்க!

First Published | Nov 18, 2024, 8:05 AM IST

ரயிலில் பயணம் செய்வது வசதியானது மட்டுமல்ல, மிகவும் சிக்கனமானதும்கூட. ரயில் டிக்கெட்டுடன் கிடைக்கும் இலவச சேவைகள் பற்றி பெரும்பாலான மக்களுக்கு தெரியாது. எங்காவது பயணம் செய்ய ரயிலைப் பயன்படுத்தப் போகிறீர்கள் என்றால், இந்த இலவச வசதிகளை பயன்படுத்திக் கொள்ளலாம்.

Train Ticket Benefits

ரயிலில் பயணம் செய்வது வசதியானது மட்டுமல்ல, மிகவும் சிக்கனமானதும்கூட. ரயில் டிக்கெட்டுடன் கிடைக்கும் இலவச சேவைகள் பற்றி பெரும்பாலான மக்களுக்கு தெரியாது. எங்காவது பயணம் செய்ய ரயிலைப் பயன்படுத்தப் போகிறீர்கள் என்றால், இந்த இலவச வசதிகளை பயன்படுத்திக் கொள்ளலாம்.

ரயில் டிக்கெட்டை வாங்குவதன் மூலம், பயணிகளுக்கு பல பலன்கள் முற்றிலும் இலவசமாகக் கிடைக்கும். படுக்கையறை முதல் உணவு வரை பல நன்மைகளைப் பெறலாம். இந்த அனைத்து வசதிகளையும் ரயில்வே எப்போது, ​​எப்படி பயணிகளுக்கு வழங்குகிறது என்பதை இத்தொகுப்பில் தெரிந்துகொள்ளலாம்.

Free Food

1. இலவச உணவு வசதி: நீங்கள் ராஜ்தானி, துரந்தோ மற்றும் சதாப்தி போன்ற பிரீமியம் ரயில்களில் பயணம் செய்தால், உங்கள் ரயில் 2 மணிநேரத்திற்கு மேல் தாமதமாக வந்தால், ரயில்வே உங்களுக்கு இலவச உணவு வழங்குகிறது. இது தவிர, உங்கள் ரயில் தாமதமாகும்போது, நீங்கள் ஏதாவது நல்ல உணவைச் சாப்பிட விரும்பினால், ரயிலில் e-Catering சேவையில் உணவு ஆர்டர் செய்யலாம்.

Latest Videos


Free Bedsheet

2. இலவச படுக்கை வசதி: நீண்ட தூரம் ரயிலில் பயணம் செய்திருந்தால், இந்திய ரயில்வே தனது பயணிகளுக்கு AC1, AC2, AC3 பெட்டிகளில் ஒரு போர்வை, ஒரு தலையணை, இரண்டு பெட்ஷீட்கள் மற்றும் ஒரு துண்டு ஆகியவற்றை வழங்கும். ஆனால், கரிப் ரத் எக்ஸ்பிரஸில் இதற்கு 25 ரூபாய் செலுத்த வேண்டும். இது தவிர, சில ரயில்களில், பயணிகள் ஸ்லீப்பர் வகுப்பிலும் படுக்கைய வசதியைப் பெறலாம்.

Medical help

3. இலவச மருத்துவ சுகாதார வசதி: ரயிலில் பயணம் செய்யும்போது உங்களுக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தால், ரயில்வே உங்களுக்கு இலவச முதலுதவி வழங்கும். ஒருவேளை உடல்நிலைமை மோசமாக இருந்தால், ரயில்வே அதிகாரிகள் மேல்சிகிச்சைக்கான ஏற்பாடுகளைச் செய்வார்கள். தேவைப்பட்டால், அடுத்த ரயில் நிறுத்தத்தில் நியாயமான கட்டணத்தில் மருத்துவ சிகிச்சை வசதியை ஏற்பாடு செய்யும்.

Waiting hall

4. இலவச காத்திருப்பு கூடம்: பல சமயங்களில் ரயிலுக்காகக் காத்திருக்க வேண்டியிருக்கும். ரயிலைப் பிடிக்க ஸ்டேஷனுக்கு முன்கூட்டியே சென்று காத்திருக்க வேண்டியிருந்தால் காத்திருப்பு கூட வசதியை பயன்படுத்தலாம். ஸ்டேஷனில் உள்ள ஏசி அல்லது ஏசி அல்லாத காத்திருப்பு கூடத்தில் பயணிகள் காத்திருக்கலாம். இதற்கு உங்கள் ரயில் டிக்கெட்டை காட்ட வேண்டும்.

Luggage

5. சரக்கு பாதுகாப்பு: நாட்டின் அனைத்து முக்கிய ரயில் நிலையங்களிலும் சரக்குகளை வைப்பதற்கான அறைகள் உள்ளன. லாக்கர் ரூம், க்ளோக் ரூம் எனப்படும் இந்த அறைகளில் உங்கள் பொருட்களை அதிகபட்சம் 1 மாதம் வரை வைத்திருக்கலாம். இருப்பினும், இதற்காக கட்டணம் செலுத்த வேண்டும்.

click me!