இந்த ரயிலில் டிக்கெட் எடுக்காமல் இலவசமாகப் பயணம் செய்யலாம்!

First Published | Oct 12, 2024, 12:56 PM IST

இந்திய ரயில்வே இயக்கும் ஒரு ரயிலில் மட்டும் அனைவரும் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்யலாம். TTE வந்தால் மாட்டிக்கொள்வோம் என்று பயப்படவும் வேண்டாம். வருடம் முழுவதும் இலவசப் பயணத்தை அனுமதிக்கும் ரயில் சேவை பற்றித் தெரிந்துகொள்வோம்.

Indian Railways

இந்திய ரயில்வே நாட்டின் பல கோடி மக்களின் பயணத்திற்கு உயிர்நாடியாக உள்ளது. தினமும் ஆயிரக்கணக்கான ரயில்களில் பல லட்சம் பேர் பயணிக்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் ரயிலில் பயணிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால், பண்டிகை காலங்களில் டிக்கெட் எடுப்பதில் சிரமம் ஏற்படுகிறது.

Train travel without ticket

இதுபோன்ற சூழ்நிலைகளில், சிலர் டிக்கெட் இல்லாமல் ரயிலில் ஏறுகிறார்கள். ஆனால் டிக்கெட் எடுக்காமல் ரயிலில் ஏறினால் சட்டப்படி தண்டனை பெற நேரிடும். ஒருவர் ரயிலில் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்தால், அபராதம் விதிக்கப்பட்டது. சிறை தண்டனைகூட விதிக்கப்படலாம்.

Tap to resize

Free Train in India

ஆனால், இதே ரயில்வேயில் பயணிகள் முற்றிலும் இலவசமாகப் பயணம் செய்வதற்கும் ஒரு ரயில் உள்ளது என்பது பலருக்குத் தெரியாது. இந்த ரயிலில் யாரும் டிக்கெட் எடுக்கத் தேவையில்லை. டிக்கெட் பரிசோதனை செய்யும் TTE வந்தால் மாட்டிக்கொள்வோம் என்ற பயமும் வேண்டாம். இந்த ரயிலில் வருடம் முழுவதும் இலவசமாகப் பயணிக்கலாம்.

Bhakra-Nangal railway service

இதுதான் இந்தியாவில் உள்ள ஒரே இலவச ரயில். இந்த ரயிலின் பெயர் 'பக்ரா-நங்கல்'. இதில் எந்தச் செலவும் இல்லாமல் பயணம் செய்யலாம். பஞ்சாப் மற்றும் இமாச்சல பிரதேசம் இடையே இந்த ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயிலில் தினமும் 800 முதல் 1000 பேர் பயணம் செய்கிறார்கள்.

Bhakra-Nangal Train

இந்த ரயிலின் பெட்டிகள் மரத்தால் செய்யப்பட்டவை. டீசல் எஞ்சின் கொண்ட இந்த ரயிலில் மொத்தம் மூன்று பெட்டிகள் மட்டுமே இருக்கும். ஒன்று, சுற்றுலா பயணிகளுக்கானது. மற்றொன்று பெண்களுக்கானது. இந்த ரயிலை இயக்க தினமும் 50 லிட்டர் டீசல் பயன்படுத்தப்படுகிறது. அழகிய மலைகளுக்கு இடையே 13 கிலோமீட்டர் தூரம் செல்லும் இந்த ரயில் பயணம் பயணிகளுக்கு அற்புதமான அனுபவத்தை அளிக்கிறது.

Bhakra-Nangal Dam

இந்த ரயிலில் பயணித்து பக்ரா-நங்கல் அணையைப் பார்க்க தொலைதூரத்தில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருகிறார்கள். இந்தப் ரயில்பாதை ஷிவாலிக் மலைகள் வழியாகச் சென்று சட்லஜ் நதியைக் கடக்கிறது.

Bhakra-Nangal railway history

1948ஆம் ஆண்டு பக்ரா-நங்கல் ரயில் சேவை தொடங்கப்பட்டது. பக்ரா நங்கல் அணை கட்டுமானத்துக்கான இயந்திரங்களைக் கொண்டுசெல்வதற்கும், தொழிலாளர்களை அழைத்துச் செல்லவும் இந்த ரயில் சேவை தொடங்கியது. காலப்போக்கில், பக்ரா-நங்கல் அணையைப் பார்க்க விரும்பும் சுற்றுலாப் பயணிகளுக்காக இந்த ரயில் இயக்கப்படுகிறது.

Bhakra-Nangal railway route

இந்த ரயிலில் டிக்கெட் எடுக்காமல், கட்டணம் ஏதும் செலுத்தாமல் மலை ரயில் பயணத்தை அனுபவிக்க முடியும். 2011ஆம் ஆண்டு நிதி நெருக்கடி காரணமாக இந்த ரயில் சேவையை நிறுத்த பரிசீலிக்கப்பட்டது. ஆனால், அந்த்த் திட்டம் கைவிடப்பட்டு, தொடர்ந்து இயக்கப்பட்டு வருகிறது.

Latest Videos

click me!