அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு என்ன தான் சொத்து இருக்கு.? வீடு, கார், நகைகள் இருக்கா.? வெளியான லிஸ்ட்

First Published | Jan 16, 2025, 1:09 PM IST

டெல்லி சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் அரவிந்த் கெஜ்ரிவால் தனது வேட்பு மனுவுடன் சொத்து விவரங்களைத் தாக்கல் செய்துள்ளார். 14 கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், அசையும் மற்றும் அசையா சொத்துகளின் மதிப்பு குறித்த விவரங்களையும் அவர் வெளியிட்டுள்ளார்.

arvind kejriwal

இந்தியாவின் தலைநகரான டெல்லியில் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி டெல்லி சட்டசபைக்கு பிப்ரவரி மாதம் 5-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதனையடுத்து பிப்ரவரி 8-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் ஆம் ஆத்மி, பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் கட்சியிடையே யார் ஆட்சியை கைப்பற்றபோகிறார்கள் என கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் கடந்த இரண்டு முறை டெல்லியை தக்க வைத்த ஆம் ஆத்மி கட்சி இந்த முறையும் கைப்பற்றுமா.? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

அந்த வகையில் தேர்தலில் களம் இறங்கிய ஆம் ஆத்மி கட்சி தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார். வேட்பு மனுவோடு சேர்த்து தாக்கல் செய்யப்பட்டுள்ள பிரமாணப்பத்திரத்தில் தன் மீதுள்ள வழக்குகள், அசையும் சொத்து, அசையா சொத்து உள்ளிட்ட விவரங்களையும் தாக்கல் செய்துள்ளார். அதன் படி தன் மீது 14 கிரிமினல் வழக்குகள் உள்ளதாக தெரிவித்துள்ளார். அதில் குறிப்பாக  டெல்லி கலால் கொள்கையை அமல்படுத்தியதில் முறைகேடுகள், அமேதியில் 2014 மக்களவைத் தேர்தல் வழக்குகளும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tap to resize

Arvind Kejriwal property list

மேலும் கடந்த 2020ஆம் ஆண்டின் போது தாக்கல் செய்த பிரமாணப்பத்திரத்தில்  அசையும் சொத்துகள் தன்னிடம் ரூ.9.95 லட்சமாகவும், தனது மனைவி சுனிதாவின் சொத்து ரூ.57 லட்சமாகவும் இருந்தாக தெரிவித்திருந்தார். தற்போது அசையும் சொத்து மதிப்பு ரூ.3.46 லட்சமும், சுனிதாவின் அசையும் சொத்து மதிப்பு ரூ.1 கோடி என குறிப்பிட்டுள்ளார். தற்போது ரொக்கமாக கெஜ்ரிவாலிடம் 40,000 ரூபாய் இருப்பதாகவும், அவரது மனைவி சுனிதா கெஜ்ரிவாலிடம் ரூ.32,000 இருப்பதாக கூறியுள்ளார்.
 

Asset Declaration

 2020 ஆம் ஆண்டு பிரமாணப் பத்திரத்தில் அசையா சொத்துகளின் மதிப்பு ரூ.1.77 கோடி மற்றும் ரூ.1 கோடி என குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது  ரூ.1.7 கோடி மதிப்புள்ள அசையா சொத்துக்கள் தன்னிடமும், சுனிதா கெஜ்ரிவாலுக்கு ரூ.1.5 கோடி சொத்து உள்ளது என தெரிவித்துள்ளார். தங்க நகைகளை பொறுத்தவரை சுனிதாவிடம் 320 கிராம் தங்கம் உட்பட ரூ.25.9 லட்சம் மதிப்புள்ள நகைகள் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். 

Arvind Kejriwal property list

அதே நேரத்தில்  அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சொந்தமாக கார் மற்றும் வீடு இல்லையெனவும் சுனிதாவிற்கு  2017 மாடல் மாருதி பலேனோவை வைத்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வருமானத்தை பொறுத்தவரை 2023- 2024ஆம் ஆண்டில் கெஜ்ரிவால் சட்டமன்ற உறுப்பினராக  ரூ 7,21,530 சம்பளம் பெற்றதாகவும்,  அதே சமயம் சுனிதாவின் ஓய்வூதியம் ரூ 14,10,740 பெற்றதாகவும் கூறியுள்ளார். 

Latest Videos

click me!