மத்திய அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் வயது 62 ஆக உயர்வா?

First Published | Nov 21, 2024, 1:59 PM IST

'ஓய்வு வயது அதிகரிப்பு திட்டம்' என்ற பெயரில் மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 2 ஆண்டுகள் அதிகரித்து 62 ஆக உயர்த்தப்பட உள்ளது என்றும் ஏப்ரல் 1, 2025 முதல் இது அமலுக்கு வரும் என்றும் கூறப்படுகிறது. இந்தச் உண்மையா? இது குறித்து PIB விளக்கம் அளித்துள்ளது.

Retirement age

ஓய்வுபெறும் வயதை உயர்த்துவது குறித்து மத்திய அரசு எந்த முடிவும் எடுக்கவில்லை. ஆனால், கடந்த சில நாட்களாக பணி ஓய்வு பெறுவதற்கான வயது வரம்பு உயர்த்தப்படுவதாக சமூக வலைதளங்களில் ஒரு பதிவு வைரலாகி வருகிறது. விசாரணையில் அந்தச் பதிவில் கூறப்படுவது பொய்யானது எனத் தெரியவந்துள்ளது. மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை உயர்த்தும் திட்டம் எதுவும் அரசிடம் இல்லை.

Increasing the retirement age

'ஓய்வு வயது உயர்வு 2024, ஓய்வு பெறும் வயது 2 ஆண்டுகள் அதிகரிப்பு, அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டது' என்ற தலைப்பில் ஒரு கடிதம் வைரலாகி வருகிறது. இந்தத் திட்டத்தின் பெயர் 'ஓய்வூதிய வயது அதிகரிப்பு திட்டம்' என்றும் அந்தப் பதிவில் கூறபடுகிறது. இதன்படி, மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வுபெறும் வயது ஏப்ரல் 1, 2025 முதல் 2 ஆண்டுகள் அதிகரித்து 62 ஆக உயர்த்தப்பட உள்ளது. அனைத்து மத்திய அரசு ஊழியர்களும் இதன் மூலம் பயன் அடைவார்கள் என்றும் அதில் கூறப்படுகிறது.

Tap to resize

Central Govt Employees Retirement

மத்திய அரசின் பத்திரிகை தகவல் பணியகம் (PIB) இது போலியானது என அறிவித்துள்ளது. செவ்வாய்கிழமை வெளியிட்ட அறிக்கையில், 'மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை 2 ஆண்டுகள் அதிகரிக்க இந்திய அரசு முடிவு செய்துள்ளதாக சமூக ஊடகங்களில் ஒரு செய்தி வைரலாகி வருகிறது. அந்தக் கூற்று பொய்யானது. இந்திய அரசு அப்படி எந்த முடிவையும் எடுக்கவில்லை.' எனக் கூறப்பட்டுள்ளது. செய்திகளின் உண்மைத்தன்மையைச் சரிபார்க்காமல் பகிர வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Jitendra Singh on Retirement age

ஆகஸ்ட் 2023 இல், அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை மாற்றும் திட்டம் உள்ளதா இல்லையா என்பது குறித்து மக்களவையில் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் பதிலளித்தார். "மத்திய ஊழியர்களின் ஓய்வு வயதை மாற்றுவது குறித்து எந்தத் திட்டமும் பரிசீலனையில் இல்லை" என்று கூறியிருந்தார்.

Latest Videos

click me!