அமெரிக்காவில் நடைபெற்று வரும் லஞ்ச ஊழல் வழக்கில் இந்தியாவைச் சேர்ந்த அதானி குழும தொழிலதிபர் கௌதம் அதானி மற்றும் அவரது மருமகன் சாகர் ஆகியோருக்கு கைது வாரண்ட் பிறக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க வழக்கறிஞர்களின் கூற்றுப்படி, 265 மில்லியன் டாலர் லஞ்ச ஊழல் வழக்கில் அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானிக்கு முக்கியத் தொடர்பு இருப்பதாக நியூயார்க்கில் நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
Gautam Adani
கவுதம் அதானி மற்றும் அவரது மருமகன் சாகர் அதானி உட்பட ஏழு பேர், 20 ஆண்டுகளில் 2 பில்லியன் டாலர் லாபம் ஈட்டக்கூடிய ஒப்பந்தங்களைப் பெறுவதற்கும், இந்தியாவின் மிகப்பெரிய சூரிய மின் நிலையத் திட்டத்தை உருவாக்குவதற்கும் இந்திய அரசாங்க அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.
நியூயார்க் நிதிமன்றத்தில் நடந்த விசாரணையின்போது, ஒரு நீதிபதி கெளதம் அதானி மற்றும் சாகர் அதானி ஆகியோருக்கு கைது வாரண்ட்களை பிறப்பித்துள்ளார். இந்த வாரண்டுகளைக் கொண்டு இந்தியாவில் அதானி மற்றும் அவரது மருமகனைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் வழக்கறிஞர்கள் கூறுகின்றனர்.