6 மாதங்களுக்கு பிறகு குறைக்கப்பட்ட சிலிண்டர் விலை: புத்தாண்டில் மக்களுக்கு குட் நியூஸ் சொன்ன அரசு!

Published : Jan 01, 2025, 10:07 AM IST

LPG Cylinder Price Cheaper From Today in Delhi : புத்தாண்டின் தொடக்கமான இன்று சிலிண்டர் விலையை அரசு குறைத்து மக்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது.

PREV
14
6 மாதங்களுக்கு பிறகு குறைக்கப்பட்ட சிலிண்டர் விலை: புத்தாண்டில் மக்களுக்கு குட் நியூஸ் சொன்ன அரசு!
LPG Cylinder Price Cut, 19 KG Commercial Cylinder Price Reduced

LPG Cylinder Price Cheaper From Today in Delhi : 2025 ஆம் ஆண்டு புத்தாண்டு இன்று புதன் கிழமை பிறந்துள்ளது. தீய பழக்க வழக்கங்களில் ஈடுபட்டவர்கள் இனிமே அதிபோன்ற ஒரு பழக்க வழக்கங்களில் ஈடுபட கூடாது என்று சபதம் எடுப்பார்கள். அதே போன்று 2025 ஆம் ஆண்டு புத்தாண்டு எல்லா நன்மைகளையும் வெற்றிகளையும் தர வேண்டும் என்று அனைவரும் வேண்டிக் கொள்வார்கள். இந்த நிலையில் தான் 2025 புத்தாண்டில் மக்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில் சிலிண்டர் விலையை குறைத்து அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

24
LPG Cylinder Price Cheaper From Today in Delhi

19 கிலோ எடை கொண்ட வர்த்தக சிலிண்டரின் விலை குறைக்கப்பட்டுள்ளது. புத்தாண்டின் தொடக்கமான ஜனவரி 1ஆம் தேதியான இன்று முதல் எல்பிஜி சிலிண்டர் விலையை 14.50 ரூபாய் எண்ணெய் நிறுவனங்கள் குறைத்துள்ளன.

34
LPG Cylinder Price Cheaper From Today

இந்த விலை குறைப்புக்கு பிறகு டெல்லியில் 19 கிலோ சிலிண்டரானது ரூ.1804க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதற்கு முன்னதாக டெல்லியில் ரூ.1818.50க்கு விற்பனை செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதே போன்று சென்னையில் ரூ.1966க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், மும்பையில் ரூ.1756க்கும், கொல்கத்தாவில் ரூ.1911க்கும் விற்பனை செய்யப்படுகின்றன. ஆனால், உள்நாட்டு சிலிண்டரானது சென்னையில் ரூ.818.50க்கும், மும்பையில் ரூ.802.50க்கும், டெல்லியில் ரூ.803க்கும், கொல்கத்தாவில் ரூ.829க்கும் விற்பனை செய்யப்படுகின்றன.

44
Commercial LPG cylinder prices reduced, LPG cylinder prices reduced

வர்த்தகத்திற்கு பயன்படுத்தப்படும் 19 கிலோ எடை சிலிண்டரானது இப்போது 6 மாதங்களுக்கு பிறகு குறைக்கப்பட்டுள்ளது. ஜூலை முதல் டிசம்பர் வரையில் உயர்ந்திருந்த வர்த்தக சிலிண்டரின் விலை இன்று முதல் ரூ.14.50 குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்பு மக்களுக்கு இன்ப அதிர்ச்சியாக அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
click me!

Recommended Stories