30 மார்க் எடுத்தாலே 10 ஆம் வகுப்பில் பாஸ்.! மாணவர்கள் கொண்டாட்டம்- அரசு முக்கிய அறிவிப்பு

Published : Jul 25, 2025, 12:44 PM ISTUpdated : Jul 25, 2025, 12:53 PM IST

 10ஆம் வகுப்பு தேர்ச்சிக்குத் தேவையான மதிப்பெண்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. இனி 30 மதிப்பெண்கள் பெற்றாலே ஒவ்வொரு பாடத்திலும் தேர்ச்சி பெற்றதாகக் கருதப்படும், மொத்த மதிப்பெண் சதவீதம் 33% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.

PREV
14
10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு

மாணவர்களுக்கு கல்வி தான் வாழ்க்கையில் முன்னேற்றத்திற்கு முக்கிய ஆயுதமாக உள்ளது. எனவே எல்கேஜி முதல் மேல்நிலைப்பள்ளி வரை படிக்கும் மாணவர்களுக்கு 10ஆம் வகுப்பு தேர்வு தான் முதல் பொதுத்தேர்வாக உள்ளது. எனவே மாணவர்கள் பயத்தோடும், பதற்றத்தோடும் தேர்வை எழுதுவார்கள். 

அந்த வகையில் மாணவர்கள் தேர்வில் வெற்றி பெற 35 மதிப்பெண்கள் பாஸ் மார்க்காக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் 35 மதிப்பெண்கள் என்பதை 30 மதிப்பெண்களாக குறைத்து அரசு அறிவித்துள்ளது. இந்த செய்தி மாணவர்களுக்கு குட் நியூஸாக அமைந்துள்ளது.

24
10ஆம் வகுப்பில் இனி பாஸ் மார்க் 30 மட்டுமே

அந்த வகையில் கர்நாடக மாநிலத்தில் 10ஆம் வகுப்பு தேர்வில் மதிப்பெண்கள் மாற்றப்பட்டுள்ளது. இனி எஸ்.எஸ்.எல்.சி தேர்வில் தேர்ச்சி பெற 35 மதிப்பெண்கள் அல்ல. 30 மதிப்பெண்கள் பெற்றால் போதும். மாணவர்களைத் தேர்ச்சி பெறச் செய்ய அரசு முக்கிய திருத்தம் செய்துள்ளது. 

புதிய கொள்கையின்படி எஸ்.எஸ்.எல்.சி தேர்வில் ஒவ்வொரு பாடத்திலும் 30 மதிப்பெண்கள் பெற்றால் போதும், மாணவர்கள் தேர்ச்சி என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. எஸ்.எஸ்.எல்.சி தேர்வில் ஒட்டுமொத்த மதிப்பெண்கள் சதவீதம் 33 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. எனவே இப்போது மொத்தம் மதிப்பெண் 625க்கு 206 எடுத்தாலே மாணவர்கள் தேர்ச்சி என்று அறிவிக்கப்படுவார்கள்.

34
625க்கு 206 எடுத்தாலே மாணவர்கள் தேர்ச்சி

முன்பு ஒட்டுமொத்த தேர்ச்சி சதவீதம் 35 ஆக இருந்தது. எனவே ஒவ்வொரு பாடத்திலும் குறைந்தபட்சம் 35 மதிப்பெண்கள் பெற்றால் மட்டுமே தேர்ச்சி ஆகும். ஆனால் இப்போது ஒவ்வொரு பாடத்திலும் 30 மதிப்பெண்கள் பெற்றால் போதும். அதே நேரம் மொத்த மதிப்பெண்ணில் தேர்ச்சி சதவீதம் 33 இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தில் இந்த முறை தற்போது நடைமுறையில் உள்ளது. எனவே மாநில தேர்வு முறையில் மாற்றம் செய்ய மாநில அரசு முன்வந்துள்ளது. கர்நாடக இடைநிலைக் கல்வித் தேர்வு வாரியத்தின் 1966ஆம் ஆண்டு விதிமுறைகளில் அரசு திருத்தம் கொண்டு வந்துள்ளது. மாணவர்கள் உள் மதிப்பீடு மற்றும் வெளித் தேர்வு உட்பட மொத்த சராசரி 33 சதவீத மதிப்பெண்களைப் பெற்றால் தேர்ச்சி என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

44
கர்நாடக அரசு அறிவிப்பு - மாணவர்கள் கொண்டாட்டம்

கர்நாடக கல்வித்துறை, பத்தாம் வகுப்பு தேர்வில் ஒரு பாடத்தில் 30 மதிப்பெண் பெற்றாலே அந்த பாடத்தில் தேர்பெற்றதாக கருதப்படுவார் என்ற புதிய சட்டத்திருத்தத்தை கொண்டுவந்துள்ளது. இதன்படி கர்நாடக மாநிலத்தில் SSLC தேர்வில் தேர்ச்சி பெற தேவையான மொத்த மதிப்பெண் விகிதம் 35% லிருந்து 33% ஆக குறைக்கப்பட்டுள்ளது. 

இதனால், 625 மதிப்பெண்களில் 206 மதிப்பெண்கள் பெற்றாலே மாணவர்கள் தேர்ச்சி பெற முடியும். மேலும், ஒவ்வொரு பாடத்திலும் 30 மதிப்பெண்கள் பெற்றாலே போதுமானது. மாநில அரசு, 1966 சட்ட விதிகளை திருத்தி, புதிய அளவுகோலை கொண்டு வந்துள்ளது. இந்த புதிய விதிமுறைகளில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் பொதுமக்கள் 15 நாட்களில் ஆட்சேபனைகளை தாக்கல் செய்யலாம் என கேட்டுக்கொண்டுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories