magalir urimai thogai
திமுகவின் தேர்தல் வாக்குறுதி
தமிழகத்தில் 2011 ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரை தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்தில் இருந்தது அதிமுக, பலம் வாய்ந்த அதிமுகவை வீழ்த்த திமுக அறிவித்த தேர்தல் அறிக்கை திட்டம் தான் மகளிர் உரிமை தொகை, பல்வேறு இலவச திட்டங்களை இரண்டு கட்சிகளும் மாறி, மாறி அறிவித்து வந்தாலும் குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் என்பது பெரிதாக பார்க்கப்பட்டது.
இதனையடுத்து இந்த திட்டத்திற்கு கிடைக்க வரவேற்பு காரணமாக ஆட்சியில் அமர்ந்தது திமுக, 10 வருடங்களுக்கு பிறகு ஆட்சியை பிடித்த திமுக தங்கள் தேர்தல் வாக்குறுதியின் படி ஒவ்வொரு திட்டங்களாக நிறைவேற்றி வருகிறது.
magalir urimai thogai
மகளிர் உரிமை தொகை திட்டம் நிறைவேற்றம்
அந்த வகையில் பெண்களுக்கு பேருந்தில் இலவச பயணம், மகளிர் உரிமை தொகை என அடுத்தடுத்து திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. அந்த வகையில் குடும்பத்தின் ஆண்டு வருமானம் 2 லட்சத்து 50 ஆயிரத்திற்குள் இருக்க வேண்டும், ஆண்டுக்கு வீட்டு உபயோகத்திற்கு 3 ஆயிரத்து 600 யூனிட் மின்சாரத்தைவிடக் குறைவாகப் பயன்படுத்தும் குடும்பங்களாக இருத்தல் வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. மேலும் ரேஷன் கார்டு இருப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டது. இதனையடுத்து 1.63 கோடி குடும்பத் தலைவிகள் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெற வேண்டி விண்ணப்பித்து இருந்தனர்.
நிபந்தனைகள் தளர்தப்படுமா.?
இதில் இரண்டு கட்ட பரிசீலனைக்கு பிறகு தற்போது ஒரு கோடியே 15 லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்கள் மாதம் ஆயிரம் ரூபாய் மகளிர் உரிமை தொகை பெற்று வருகின்றனர். இந்தநிலையில் மகளிர் உரிமை தொகையில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும், 1000 ரூபாய் வழங்குவதை 2000 ரூபாயாக அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இதனையடுத்து தமிழக அரசு சார்பாக புதிய அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது. குறிப்பாக நிபந்தனைகள் தளர்த்தப்படும் எனவும், தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு வருட காலமே இருப்பதால் மகளிர் உரிமை தொகையை அதிகரிப்பது தொடர்பான அறிவிப்பும் வெளியாகும் என கூறப்படுகிறது.
மற்ற மாநிங்களிலும் மகளிர் உரிமை தொகை
இந்தநிலையில் தமிழக அரசால் செயல்படுத்தப்படும் மகளிர் உரிமை தொகை திட்டத்தை போன்று மற்ற மாநிலத்திலும் செயல்படுத்தப்படுகிறது. கர்நாடாகவில் மகளிர்களுக்கு உதவிடும் வகையில் மாதம் 2ஆயிரம் ரூபாயும், தெலங்கானாவில் 2500 ரூபாயும் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் காஷ்மீரில் 3000 ரூபாய் மகளிர் உரிமை தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பஞ்சாப்பில் 1100 மகளிர் உரிமை தொகை
இந்த நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் ஏற்கனவே மகளிர் உரிமை தொகை ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என ஆம் ஆத்மி கட்சி அறிவித்திருந்தது. தற்போது பஞ்சாப் மாநிலத்தில் வரும் நவம்பர் மாதம் 13-ஆம் தேதி சப்வேவால் சட்டசபை தொகுதியின் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதனை தொடர்ந்து சப்பேவால் சட்டசபை தொகுதியின் ஆம் ஆத்மி வேட்பாளருக்கு ஆதரவாக முதலமைச்சர் பகவந்த் மான் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர் பிரச்சார கூட்டத்தில் பேசிய அவர், மாதம் ஆயிரம் ரூபாய் மகளிர்களுக்கு வழங்குவோம் என தெரிவித்தோம், எனவே 100 ரூபாய் அதிகரித்து மாதம் 1100 ரூபாய் வழங்குவோம் எனவும்,எங்களது அடுத்த திட்டம் ஒவ்வொரு மாதமும் பெண்களுக்கு ரூபாய் 1,100 வழங்குவதே ஆகும் என முதலமைச்சர் பகவந்த் மான் தெரிவித்துள்ளார்,