சென்னை டூ பெங்களூரு வெறும் 2 மணி நேரம் தான்! மணிக்கு 220 கி.மீ வேகம்.. கெத்தாக களமிறங்கும் புதிய ரயில்!

Published : Apr 11, 2026, 05:46 PM IST

இந்தியாவில் மணிக்கு 220 கி.மீ வேகத்தில் செல்லும் புதிய ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டால் சென்னையில் இருந்து கோவைக்கும், சென்னையில் இருந்து மதுரைக்கும் 4 மணி நேரத்தில் செல்ல முடியும்.

PREV
14
இந்தியாவில் அதிவேக ரயில்கள்

இந்தியாவில் தொலைதூர இடங்களுக்கு வசதியாகவும், களைப்பின்றியும் பயணம் செய்ய முடியும் என்பதால் தினமும் பல லட்சக்கணக்கான பயணிகள் ரயிலில் பயணம் செய்து வருகின்றனர். நமது நாட்டில் சொகுசு ரயில்கள், அதிவேக விரைவு ரயில்கள், விரைவு ரயில்கள், சாதாரண முன்பதிவில்லாத ரயில்கள், மெமு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தேஜாஸ், சதாப்தி, தூரந்தோ, ராஜ்தானி உள்ளிட்ட பல்வேறு அதிவேக விரைவு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

24
வந்தே பாரத்துக்கு வரவேற்பு அதிகரிப்பு

இதேபோல் நாட்டிலேயே அதிவேகமாக செல்லும் வந்தே பாரத் ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. மற்ற ரயில்களை விட அதிவேகமாக செல்வதாலும், தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு முன்கூட்டியே செல்ல முடியும் என்பதாலும் வந்தே பாரத் ரயில்களுக்கு பயணிகள் மத்தியில் வரவேற்பு அதிகமாக இருந்து வருகிறது. இந்த நிலையில், வந்தே பாரத் ரயில்களை விட அதிவேகமாக செல்லும் ரயில்கள் இந்தியாவில் அறிமுகமாக உள்ளன.

34
மணிக்கு 220 கிமீ வேகத்தில் செல்லும் ரயில்கள்

அதாவது வந்தே பாரத் ரயில்களின் வடிவமைக்கப்பட்ட வேகம் மணிக்கு 180 கி.மீ ஆகும். இதைவிட மணிக்கு 220 கிமீ வேகத்தில் செல்லும் இரண்டு புதிய ரயில் பெட்டிகளைத் தயாரிக்க மத்திய ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த அதிவேக ரயில்களை சென்னையின் ஐ.சி.எஃப் மற்றும் பி.இ.எம்.எல் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்க உள்ளன. இந்த ரயில் பெட்டிகள் துருப்பிடிக்காத எஃகு கொண்டு தயாரிக்கப்படும். நவீன ஏரோடைனமிக் வடிவமைப்பு மற்றும் பயணிகளுக்கான உலகத்தரம் வாய்ந்த வசதிகள் இதில் இடம்பெறும்.

44
சென்னை டூ பெங்களூரு 2 மணி நேரம் தான்

மணிக்கு 220 கி.மீ வேகத்தில் செல்லும் புதிய ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டால் சென்னையில் இருந்து கோவைக்கும், சென்னையில் இருந்து மதுரைக்கும் 4 மணி நேரத்தில் செல்ல முடியும். மேலும் சென்னையில் இருந்து பெங்களூருவுக்கு வெறும் 2 மணி நேரத்தில் சென்று விட முடியும். இந்தியாவில் அதிவேக ரயிலான 'வந்தே பாரத்' இப்போது அதிகபட்சமாக 160 கி.மீ வேகத்தில் மட்டுமே இயக்கப்படுகின்றன. இந்தியாவின் வரவிருக்கும் அதிவேக ரயில் வழித்தடங்களுக்கு ஏற்ப, எதிர்காலத் தேவையைப் பூர்த்தி செய்ய இந்த 220 கி.மீ வேக ரயில்கள் மிக முக்கியமான ஒன்றாக இருக்கும்.

தண்டவாளம் சீரமைப்பு வேண்டும்

இந்தியாவில் இப்போது அமைக்கப்பட்டுள்ள ரயில்வே தண்டவாளங்கள் மணிக்கு 130 கிமீ முதல் 160 கிமீ வரையிலான வேகத்தை தாங்கக் கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஆகவே மணிக்கு 220 கிமீ வேகத்தில் செல்லும் ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டாலும், அந்த வேகத்தை தாங்கும் வகையில் தண்டவாளங்கள் சீரமைக்கப்பட்டால் தான் அந்த ரயில்களை இயக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Read more Photos on
click me!

Recommended Stories