யாருக்கெல்லாம் ஆதார் அட்டை தேவை
ஆதாரில் புகைப்படம், கைரேகை, கருவிழி பதிவு செய்வது, முகவரி மாற்றம் செய்வது, பெயர் மற்றும் பிறந்த தேதி ஆகியவை திருத்தம் செய்வது போன்ற பணிகளுக்கு ஆதார் மையத்தில் ரூ.50 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. குறிப்பாக இந்தியாவில் உள்ள எந்தவொரு நபரும் வயது, பாலினம் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல், ஆதார் எண்ணைப் பெற பதிவு செய்யலாம். பிறந்த குழுந்தைகள் முதல் ஆதார் எண் முக்கிய தேவையாக உள்ளது.
தனி நபர் ஒருவர் பெயரில் ஆதார் எண் உருவாக்கப்படும் . அந்த எண்ணின் மூலமாகவே அந்த நபர் தொடர்பான அனைத்து தகவல்களையும் பெற முடியும். ஒரு தனிநபரின் பேரில் ஒரே ஒரு ஆதார் மட்டுமே உருவாக்கப்படும். ஆதார் அட்டையில் இந்திய குடிமகனின் பெயர், பிறந்த தேதி, பாலினம், குடியிருப்பு முகவரி, மொபைல் எண் ஆகிய விவரங்கள் இடம்பெற்றிருக்கும்.