OYO Rules : பல இளம் ஜோடிகள் சிறிது நேரம் அமைதியாக கழிப்பதற்காக ஓயோ (OYO) அல்லது பிற ஹோட்டல்களில் அறைகளை புக் செய்கிறார்கள். ஆனால், திருமணம் ஆகவில்லை என்றால் ரூம் தருவார்களா? போலீஸார் தொந்தரவு செய்வார்களா? இது குறித்து இந்தியச் சட்டம் என்ன சொல்கிறது?
இந்தியாவில் இருவரும் சட்டப்பூர்வ வயதுடையவர்களாக இருந்தால், அவர்கள் பரஸ்பர சம்மதத்துடன் ஹோட்டலில் ஒரே அறையில் தங்குவதை சட்டம் தடை செய்யவில்லை. பொதுவாக ஆண் 21 வயது அல்லது அதற்கு மேற்பட்டவராகவும், பெண் 18 வயது அல்லது அதற்கு மேற்பட்டவராகவும் இருந்தால், அவர்கள் தங்கள் விருப்பப்படி சேர்ந்து இருக்கலாம். எனவே, திருமணம் ஆகவில்லை என்ற காரணத்திற்காக மட்டுமே ஹோட்டல் அறை புக் செய்வதை சட்டம் தவறாகக் கருதாது.
ஒரே ஊரில் உள்ள அடையாள அட்டையை (Local ID) காட்டினால் ஹோட்டலில் ரூம் தரமாட்டார்கள் என பலர் நினைக்கிறார்கள். ஆனால் சட்டப்படி, லோக்கல் ஐடி இருப்பதால் மட்டும் ரூம் தர மறுக்க முடியாது. இருந்தாலும், ஒவ்வொரு ஹோட்டலுக்கும் அதன் சொந்த விதிகள் இருக்கலாம். இப்போது OYO உட்பட பல பெரிய ஹோட்டல்கள் லோக்கல் ஐடியை ஏற்றுக்கொள்கின்றன. அதனால், ரூம் புக் செய்யும் முன் "Couples Allowed", "Local ID Accepted" போன்ற விவரங்களைச் சரிபார்ப்பது நல்லது.
இந்த விஷயத்தில் பலருக்கும் பயம் இருக்கும். ஆனால், மேஜரான இருவர் சம்மதத்துடன் ஹோட்டலில் தங்கியிருந்தால், அந்த காரணத்திற்காக மட்டும் போலீஸ் அவர்களைக் கைது செய்யவோ, தொந்தரவு செய்யவோ முடியாது. அதேநேரம், அந்த அறையில் சட்டவிரோத நடவடிக்கைகள் நடப்பதாக சந்தேகம் எழுந்தால் மட்டுமே போலீஸ் விசாரிக்கலாம். சாதாரண சூழலில், காரணம் இல்லாமல் அவர்கள் தலையிட அதிகாரம் இல்லை.
ஹோட்டலில் செக்-இன் செய்யும்போது, செல்லுபடியாகும் அடையாள அட்டையை கட்டாயம் கொடுக்க வேண்டும். ஹோட்டல் விதிகளைப் பின்பற்றுவதும் அவசியம். ரூம் புக் செய்வதற்கு முன், அந்த ஹோட்டலில் ஜோடிகளுக்கு அனுமதி உண்டா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். ஆன்லைனில் புக் செய்தால், ஹோட்டல் பாலிசியை முழுமையாகப் படிப்பது நல்லது. இதனால் பின்னாளில் எந்தப் பிரச்சனையும் வராது.
இந்திய சட்டப்படி, வயது வந்த இருவர் பரஸ்பர சம்மதத்துடன் ஹோட்டலில் தங்குவது குற்றம் அல்ல. ஆனால், ஒவ்வொரு ஹோட்டலுக்கும் அதன் சொந்த வணிக விதிகளை செயல்படுத்த உரிமை உண்டு. எனவே, ஹோட்டல் பாலிசிகளை மதிப்பது, சரியான அடையாள அட்டைகளை கையில் வைத்திருப்பது, சட்டவிரோத செயல்களில் ஈடுபடாமல் இருப்பது மிகவும் முக்கியம். இந்த விதிகளைப் பின்பற்றினால், OYO அல்லது மற்ற ஹோட்டல்களில் எந்தப் பிரச்சனையும் இல்லாமல் தங்கலாம்.