வணிக வாகனங்களை இயக்க LMV லைசன்ஸ் போதும்: உச்சநீதிமன்றம் அதிரடி

Published : Nov 07, 2024, 08:41 AM ISTUpdated : Nov 07, 2024, 11:09 AM IST

இலகுரக மோட்டார் வாகனங்களுக்கான ஓட்டுநர் உரிமம் இருந்தாலே வணிக போக்குவரத்து வாகனங்களை இயக்கலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.

PREV
15
வணிக வாகனங்களை இயக்க LMV லைசன்ஸ் போதும்: உச்சநீதிமன்றம் அதிரடி
Motor Vehicle Act

எல்எம்வி (Light Motor Vehicle) ஓட்டுநர் உரிமம் வைத்துள்ள ஒருவர் வணிக போக்குவரத்து வாகனங்களை இயக்குவதை கடந்த 2017ம் ஆண்டு 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு சாத்தியமாக்கியது. ஆனால் இதனை எதிர்த்து காப்பீட்டு நிறுவனங்கள் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. 

25
Motor Vehicle Act

வழக்கு தொடர்பான மனுவில், “எல்எம்வி ஓட்டுநர் உரிமம் வைத்துள்ள ஒருவரை லாரி, பேருந்து மற்றும் ரோடு ரோலர் உள்ளிட்ட வாகனங்களை இயக்க அனுமதிக்கும் முடிவானது பொதுமக்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும். மேலும் இது காப்பீட்டு நிறுவனங்களின் சுமையை அதிகரிக்கும்” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

35
Motor Vehicle Act

இந்த மனு மீது தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் அமர்வு விசாரணை மேற்கொண்டது. இந்நிலையில் எல்எம்வி ஓட்டுநர் உரிமம் வைத்திருக்கும் நபர் 7,500 கிலோவுக்கு குறைவான எடை கொண்ட வணிக போக்குவரத்து வாகனங்களை இயக்கலாம் என்று தீர்ப்பு அளித்துள்ளது. 

45
Motor Vehicle Act

இது தொடர்பாக நீதிபதிகள் கூறுகையில், “கடந்த 2017ம் ஆண்டில் மட்டும் சாலை விபத்துகளால் 17 லட்சத்திற்கும் அதிகமானோர் சாலை விபத்துகளில் உயிரிழந்துள்ளனர். இதனை கணக்கில் வைத்துக் கொண்டால் சாலை பாதுகாப்பு என்பது ஒரு தீவிரமான பொது பிரச்சினையாகும். ஆனால் இலகுரக மோட்டார் வாகன ஓட்டுநர் உரிமம் வைத்திருப்போர் வணிக போக்குவரத்து வாகனங்களை இயக்குவதால் விபத்து ஏற்படுகிறது என்ற கூற்றை சாத்தியமாக்கும் தரவுகள் இல்லை.

55
Motor Vehicle Act

மோட்டார் வாகன சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அளவுகோல்கள் அனைத்தும் 7,500 கிலோவுக்கு மேல் வணிக வாகனங்களை ஓட்ட விரும்புவோருக்கு மட்மே பொருந்தும். பிற வணிக வாகனங்கள், நடுத்தர சரக்கு வாகனங்கள் இதில் அடங்கும். அப்படி பார்க்கும் போது கடந்த 2017ம் ஆண்டு வழங்கப்பட்ட தீர்ப்பு ஏழை குடும்பத்தைச் சேர்ந்த ஓட்டுநர் ஒருவர் வணிக வாகனத்தை ஓட்ட அனுமதித்தது. அவர்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு மத்திய அரசு சட்டதிருத்தத்தை மேற்கொள்ள பரிசீலிக்க வேண்டும் என்று நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.

Read more Photos on
click me!

Recommended Stories