அவர்களை காவல்நிலையம் அழைத்து சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது இளைஞர் ஒருவரின் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு இந்த போதை விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது. மேலும் பண்ணை வீட்டில் தடை செய்யப்பட்ட விலை உயர்ந்த வெளிநாட்டு போதைப்பொருட்களான கோகைன், ஹைபிரிட் கஞ்சா, சரஸ் உள்ளிட்ட பல்வேறு போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ரேவ் பார்ட்டி என்ற பெயரில் விடிய விடிய ஆட்டம் போட்டு போதையில் எல்லைமீறிய 20 பெண்கள் உட்பட 31 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டிருப்பது பெங்களூருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.