SIR -க்கு பயம்..! மேற்கு வங்கத்தை விட்டு சாரை சாரையாக வெளியேறும் வங்கதேசத்தினர்..! அதிர்ச்சி வீடியோ..!

Published : Nov 17, 2025, 10:23 AM IST

கடந்த 3 மாதங்களில் 8,000க்கும் மேற்பட்ட லாக்யல் குடியேறிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். எஸ்.ஐ.ஆர் தொடங்கிய பின், கொல்கத்தாவின் சால்ட் லேக், நியூஸ் டவுன் பகுதிகளில் உள்ளவர்கள் வெளியேறி வருகின்றனர்.

PREV
13
சாரை சாரையாக வெளியேறும் மக்கள்

எஸ்.ஐ.ஆர் என்னும் சிறப்பு தீவிரமாக வாக்காளர் திருத்த பரிசோதனை, எல்லை பாதுகாப்பு படையினரின் கைதுகள் காரணமாக மேற்கு வங்காளத்தை விட்டு வங்காளதேசியர்கள் சாரை சாரையாக வெளியேறி வருகின்றனர்.

மேற்கு வங்காளத்தில் எஸ்.ஐ.ஆர் மற்றும் எல்லைப் பாதுகாப்புப் படை நடவடிக்கைகளால் பயப்படும் வங்கதேசிகள் வெளியேறி வருகின்றனர். மேற்கு வங்காளத்தில் தேர்தர் பட்டியலை சிறப்பு தீவிரமாக பரிசோதிக்கும் செயல்முறை தொடங்கியது முதல், பல லாக்யல் வங்கதேசிகள் பயத்தால் அரசியல் அமைதியின்மை, வாக்காளர் பட்டியல் அகற்றல் பயத்தால் வெளியேற முயற்சிக்கின்றனர். இதன் காரணமாக, எல்லைப்பாடுகாப்பு படை அதிகாரிகள் சமீபத்தில் பல்வேறு கைதுகளைச் செய்துள்ளனர்.

இது மாநிலத்தில் அரசியல் விவாதங்களையும் தூண்டியுள்ளது. எஸ்.ஐ.ஆர் என்னும் சிறப்பு தீவிரமாக வாக்காளர் திருத்த பரிசோதனையை இந்திய தேர்தல் ஆணையம் மேற்கு வங்கத்தில் செயல்படுத்தி வருகிறது. இதில், பூத் அளவிலான அதிகாரிகள் (BLOs) வீடு-வீடாகச் சென்று வாக்காளர் பட்டியலில் உள்ள தகவல்களை சரிபார்க்கின்றனர்.

23
திரிணாமுல் காங்கிரஸின் வோட் பேங்க்?

மேற்கு வங்காளத்தில் தேர்தர் பட்டியலில் லாக்யல் குடியேறிகள், குறிப்பாக வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள பதிவு செய்திருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. பாஜக போன்ற கட்சிகள் இதை "வோட் பேங்க்" என்று விமர்சித்து வருகின்றன. எஸ்.ஐ.ஆர் 2025 நவம்பரில் தொடங்கியது. லாக்யல் குடியேறிகள் எஸ்.ஐ.ஆர் சரிபார்ப்பில் அடையாளம் காணப்படுவதற்கும், எல்லைப்படை பாதுகாவலர்கள், காவல் துறை கைது செய்வதற்கும் பயப்படுகின்றனர். இதன் காரணமாக, பலர் வங்கதேசத்திற்கு திரும்ப முயற்சிக்கின்றனர்.

எஸ்.ஐ.ஆர் அறிவிப்புக்குப் பின், பசிராட், ஸ்வருப் நகர், பிடாரி, தராளி போன்ற பகுதிகளில் பல குழுக்கள் வங்கதேச எல்லையை கடக்க முயன்றனர். இவர்கள் பெரும்பாலும் கொல்கத்தா, ராஜர்ஹாட் போன்ற இடங்களில் தொழிலாளர்கள், வீட்டு உதவியாளர்களாக வேலை செய்து வந்தவர்கள். அப்போடு 11 குழந்தைகள் உட்பட 45 பேர் கைது செய்யப்பட்டனர். ஸ்வரூப் நகரை சேர்ந்த 33 வீட்டு உதவியாளர்கள் கைடு செய்யப்பட்டனர். 3 நாட்களில் 89 பேர் கைது கைது செய்யப்பட்டு அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர்.

33
பாஜகவின் அரசியல் சதியா?

கடந்த 3 மாதங்களில் 8,000க்கும் மேற்பட்ட லாக்யல் குடியேறிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். எஸ்.ஐ.ஆர் தொடங்கிய பின், கொல்கத்தாவின் சால்ட் லேக், நியூஸ் டவுன் பகுதிகளில் உள்ளவர்கள் வெளியேறி வருகின்றனர். எல்லைப் பகுதிகளில் பேட்ரோல் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. பாஜகவினர் எஸ்.ஐ.ஆர் மூலம் லாக்யல் குடியேறிகளை அகற்ற வேண்டும் என்கின்றனர். திரிணாமுல் காங்கிரஸ் எஸ்.ஐ.ஆரை எதிர்க்கிறது.

மேற்கு வங்க பாஜக தலைவர் சுகனந்தா மஜூம்தார், "1.5 கோடி வங்கதேசிகள், ரோஹிங்யா மக்கள் வாக்காளர்களாக உள்ளனர். இதை எஸ்.ஐ.ஆர் சரிசெய்யும்" என்று கூறினார். மம்தா பானர்ஜி எஸ்.ஐ.ஆரை "அரசியல் சதி" என்று விமர்சித்துள்ளார். இது உண்மையான குடிமக்களையும் பாதிக்கும் என்று கூறுகிறார்.

Read more Photos on
click me!

Recommended Stories