இந்திய ரயில்வேயில் பல்வேறு வகையான ரயில்கள் இருப்பது அனைவருக்கும் தெரிந்தது தான். சதாப்தி, ராஜ்தானி, துரந்தோ மற்றும் வந்தே பாரத் போன்ற ரயில்கள் இயக்கபப்ட்டு வருகின்றன. இந்த வகை ரயில்கள் தவிர, இந்தியாவில் ஒரு சிறப்பு ரயில் உள்ளது. ஆசியாவிலேயே அதிக விலை கொண்ட ரயிலாக இது மாறியுள்ளது.
மஹாராஜா எக்ஸ்பிரஸ்
நம் நாட்டில் மிகவும் விலை உயர்ந்த ரயிலாக மாறியுள்ள இந்த ரயிலின் பெயர் மகாராஜா எக்ஸ்பிரஸ். ஆசியாவிலேயே மிகவும் சொகுசு ரயில் இது தான். இந்த ரயில் ஆடம்பர வசதிகளின் தாயகமாக உள்ளது. இதற்கான கட்டணம் லட்ச ரூபாய். ஒருவகையில் இந்த ரயிலை ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் என்று சொல்லலாம். இந்த ரயிலில் ஏறும் பயணிகளுக்கு உலகத்தரம் வாய்ந்த வசதிகள் கிடைக்கும்.ம்.