அஜித் பவார் விமான விபத்துக்கு இதுதான் காரணம்.. வெளியான அதிச்ச்சி தகவல்!

Published : Jan 28, 2026, 05:32 PM IST

. ஒருமுறை சுற்றி வந்த பிறகு, விமானம் மீண்டும் தரையிறங்க வந்தது. அப்போது ஓடுபாதை தரையிறங்குவதற்குத் தெரிகிறதா என்று விமானியிடம் மீண்டும் கேட்கப்பட்டது. அப்போது, விமானி ஓடுபாதை தெரிவதை உறுதி செய்தார்.

PREV
13
அஜித் பவார் மரணம்

மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் பாராமதியில் நடந்த விமான விபத்தில் உயிரிழந்தார். மகாராஷ்டிராவின் மும்பையில் இருந்து பாராமதிக்குச் சென்ற தனி விமானத்தில் பயணம் செய்த அஜித் பவார் விமான ஊழியர்கள் உட்பட ஐந்து பேர் விமானம் விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தனர்.

மும்பை-பாராமதி தனி விமானம் பாராமதியில் உள்ள ஓடுபாதையில் அவசரமாக தரையிறங்கிய முயற்சிக்கும்போது விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது.

23
விபத்துக்கு இதுதான் காரணம்

மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் உயிரிழந்த விமான விபத்து குறித்து வெளிப்படையான மற்றும் பொறுப்பான விசாரணை நடத்தப்படும் என்று மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு தெரிவித்துள்ளார். மேலும் பனிமூட்டமே விபத்துக்கு முக்கிய காரணம் என்றும் அவர் கூறியுள்ளார்.

வெளிப்படையான விசாரணை

இது தொடர்பாக பேசிய அவர், ''விமான விபத்து தொடர்பாக நாங்கள் வெளிப்படையான மற்றும் பொறுப்பான முறையில் விசாரணை நடத்துவோம். காலை 8:48 மணியளவில் தரையிறங்கும் நேரத்தில் அந்த இடத்தில் பனிமூட்டம் காரணமாக பார்வைத் திறன் குறைவாக இருந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. தரையிறங்குவதற்கு முன்பு, விமானிக்கு ஓடுபாதை தெரிகிறதா என்று விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாடு கேட்டது.

33
ஓடுபாதை தெரிவதை உறுதி செய்த விமானி

அதற்கு அவர் இல்லை என்று உறுதிப்படுத்தினார். ஒருமுறை சுற்றி வந்த பிறகு, விமானம் மீண்டும் தரையிறங்க வந்தது. அப்போது ஓடுபாதை தரையிறங்குவதற்குத் தெரிகிறதா என்று விமானியிடம் மீண்டும் கேட்கப்பட்டது. அப்போது, விமானி ஓடுபாதை தெரிவதை உறுதி செய்தார். ஏடிசி தரையிறங்க அனுமதித்த பிறகு, விபத்து நடந்திருப்பது தெரியவந்தது'' என்று கூறியுள்ளார்.

ஈடுசெய்ய முடியாத இழப்பு

தொடர்ந்து பேசிய ராம் மோகன் நாயுடு, ''என் இதயம் துயரத்தால் கனத்துள்ளது. அஜித் தாதா இப்போது நம்முடன் இல்லை என்பதை ஜீரணிக்க கடினமாக உள்ளது. இந்த சம்பவத்தில் உயிரிழந்த மற்ற நான்கு பேரின் குடும்பத்தினருக்கும் எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அஜித் தாதா தனது பொதுச் சேவை அனுபவத்தால் எங்களுக்கு நிறைய வழிகாட்டுவார். இது மகாராஷ்டிராவுக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு. அவரைப் போன்ற தலைவர்களைக் கண்டுபிடிப்பது மிகவும் கடினம்" என்றார்

Read more Photos on
click me!

Recommended Stories