ரூ.599க்கு விமான டிக்கெட்! அதுவும் பிரீமியம் கிளாஸ்! நடுத்தர மக்களும் ஜாலியாக பறக்கலாம்!
ஏர் இந்தியா நிறுவனம் ரூ.599க்கு பிரீமியம் கிளாஸ் விமானத்தில் பயணிக்கும் சலுகையை அறிமுகப்படுத்தியுள்ளது. இது தொடர்பான முழு விவரங்களை பார்க்கலாம்.
ஏர் இந்தியா நிறுவனம் ரூ.599க்கு பிரீமியம் கிளாஸ் விமானத்தில் பயணிக்கும் சலுகையை அறிமுகப்படுத்தியுள்ளது. இது தொடர்பான முழு விவரங்களை பார்க்கலாம்.
Air India Flight Ticket Offer: இந்தியாவில் விமானத்தில் செல்ல வேண்டும் என்பது அனைவரின் கனவாக உள்ளது. பணக்காரர்கள் எளிதில் விமானங்களில் பயணம் செய்யும் நிலையில், நடுத்தர மக்களும் விமானங்களில் பயணம் செய்யும் வகையில் டாடா குழுமத்தின் ஏர் இந்தியா விமான நிறுவனம் சலுகை விலையில் விமான டிக்கெட்டுகளை விற்பனை செய்து வருகிறது.
இந்நிலையில், ஏர் இந்தியா நிறுவனம் உள்நாட்டு விமானங்களில் ஸ்டாண்டர்ட் எகானமி கட்டணங்களை விட ரூ.599 இல் தொடங்கும் பிரீமியம் எகானமி கட்டணங்களை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சலுகை வழித்தடம் மற்றும் தேவையைப் பொறுத்து மாறுபடும். வணிக மற்றும் எகானமி வகுப்போடு பிரீமியம் எகானமியை வழங்கும் இந்தியாவின் ஒரே விமான நிறுவனம் ஏர் இந்தியா ஆகும். ஏர் இந்தியா இந்த ரூ.599 சலுகையை 39 உள்நாட்டு வழித்தடங்களில் வழங்குகிறது.
சலுகை விலையில் வாரத்திற்கு 50,000 க்கும் மேற்பட்ட இருக்கைகள் வழங்கப்பட்டு வந்தன. இப்போது சலுகை விலையில் பிரீமியம் எகானமி இருக்கைகளை 30 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் சலுகை விலை பிரீமியம் எகானமி இருக்கைகள் வாரத்திற்கு 65,000 தாண்டிவிடும். இந்த இருக்கைகளில் சுமார் 34,000 இருக்கைகள் முக்கிய மெட்ரோ-டு மெட்ரோ வழித்தடங்களுக்கு சேவை செய்கின்றன.
பாகிஸ்தானை போல் இந்தியாவிலும் ரயில் கடத்தப்பட்டதா? எப்போது? எங்கு நடந்தது?
அதாவது டெல்லி-மும்பை, டெல்லி-பெங்களூரு, டெல்லி-ஹைதராபாத், மும்பை-பெங்களூரு மற்றும் மும்பை-ஹைதராபாத் போன்ற முக்கிய வழித்தடங்களில் ரூ.599 என தொடங்கும் சலுகை விலையில் பிரீமியம் எகானமி கிளாஸில் நீங்கள் பயணம் செய்ய முடியும். ஏர் இந்தியாவின் பிரீமியம் எகானமி கிளாஸ், எகானமி வகுப்பை விட குறைவான இருக்கைகள் மற்றும் கூடுதல் கால் இடவசதி கொண்ட பிரத்யேக கேபினை வழங்குகிறது. இது விமானத்தில் அமைதியான, உயர்தர சூழலை வழங்குகிறது.
ஏர் இந்தியாவின் பிரீமியம் எகானமி வாடிக்கையாளர்கள் கூடுதலாக பின்வரும் நன்மைகளை அனுபவிக்க முடியும்:-
* கேபின் முழுவதும் விருப்பமான இருக்கைகளின் இலவச தேர்வு
* விமான நிலையங்களில் செக்-இன், போர்டிங் மற்றும் லக்கேஜ்களை கையாளுதல் சேவையில் முன்னுரிமை வழங்கப்படும்
* 4 இன்ச் சாய்வு தன்மையுடன் 32 இன்ச் இருக்கை பிட்ச்
* உயர்ந்த இருக்கை அப்ஹோல்ஸ்டரி
* பிரீமியம் கிளாசில் பரிமாறப்படும் சூடான விதவிதமான உணவுகளை இலவசமக ருசி பார்க்கலாம்.
ரயில்களில் வழங்கப்படும் உணவு! மத்திய அரசு சொன்ன குட் நியூஸ்! பயணிகளுக்கு இனி கவலையில்லை!