இந்த விபத்து குறித்து விமான விபத்து புலனாய்வு அமைப்பு (AAIB) விசாரணை நடத்தியது. என்ஜின்களுக்குச் செல்லும் எரிபொருள் சுவிட்சுகள் Run' நிலையிலிருந்து 'Cut-off' நிலைக்கு மாற்றப்பட்டதே என்ஜின் நிறுத்தப்படக் காரணம் என்று தகவல் வெளியாகி இருந்தது.
காக்பிட் குரல் பதிவும் வெளியாகி இருந்தது. ஏன் எரிபொருள் சுவிட்சை ஆஃப் செய்தீர்கள்? என்று ஒரு விமானி கேட்க, மற்றொருவர் நான் எதையும் செய்யவில்லை என்று பதிலளித்த உரையாடல் பதிவாகி இருந்தது.
ஏர் இந்தியா விமான விபத்து திட்டமிட்ட சதி?
இந்த நிலையில், ஏர் இந்தியா விமான விபத்து ஒரு திட்டமிட்ட சதி என்று இத்தாலிய நாளிதழ் ஒன்று பரபரப்பு செய்தி வெளியிட்டுள்ளது. அதாவது தொழில்நுட்ப கோளாறு ஏதுமின்றி ஒரு விமானி வேண்டுமென்றே எரிபொருள் சுவிட்ச்சை அணைத்ததால் தான் இந்த விபத்து ஏற்பட்டதாக இத்தாலிய நாளிதழ் கூறியுள்ளது.
விபத்தில் பலியான விமானி சுமீத் சபர்வால் கடும் மன அழுத்தத்தில் இருந்ததாகவும், அதுவே இந்த முடிவுக்குக் காரணம் என்றும் செய்திகள் வெளியாகின. ஆனால் அவரது குடும்பத்தினர் இதைத் திட்டவட்டமாக மறுத்துள்ளனர்.