அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்! 8வது ஊதியக் குழுவின் தலைவர், உறுப்பினர்கள் நியமனம்!

Published : Oct 28, 2025, 05:53 PM IST

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை, 8வது ஊதியக் குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. ஓய்வுபெற்ற நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இந்தக் குழு, 18 மாதங்களுக்குள் பரிந்துரைகளை சமர்ப்பிக்கும்.

PREV
14
8வது ஊதியக் குழுவுக்கு ஒப்புதல்

மத்திய அரசு ஊழியர்களின் ஊதியத்தை மேம்படுத்துவதற்காக அமைக்கப்பட்ட 8-வது மத்திய ஊதியக் குழுவின் (8th Central Pay Commission) தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்குப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இன்று (அக்டோபர் 28) ஒப்புதல் வழங்கியுள்ளது.

கடந்த ஜனவரி 16, 2025 அன்று இந்தக் குழுவை அமைப்பதற்கு மத்திய அமைச்சரவை கொள்கை அளவில் ஒப்புதல் அளித்திருந்தது. இந்நிலையில், தற்போது 10 மாதங்கள் கழித்து, குழுவின் முக்கிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

24
நியமனம் செய்யப்பட்டுள்ள உறுப்பினர்கள்

உச்ச நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் அவர்கள் ஊதியக் குழுவின் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

ஐ.ஏ.எஸ். அதிகாரியான பங்கஜ் ஜெயின் அவர்கள் ஊதியக் குழுவின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ஐ.ஐ.எம். பெங்களூரு பேராசிரியர் புலக் கோஷ் அவர்கள் பகுதி நேர உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.

34
8வது ஊதியக் குழுவின் செயலபாட்டு வரம்புகள்

இந்த நியமனம் குறித்து மத்திய மந்திரி அஷ்வினி வைஷ்ணவ் பேசுகையில், "மத்திய அமைச்சகங்கள், மாநில அரசுகள் மற்றும் கூட்டு ஆலோசனைக் குழு (JCM) ஆகியவற்றுடன் விரிவான கலந்தாலோசனைக்குப் பிறகு, 8-வது ஊதியக் குழுவின் செயல்பாட்டிற்கான விதிமுறைகள் (Terms of Reference - ToR) தற்போது இறுதி செய்யப்பட்டுள்ளன," என்று தெரிவித்தார்.

44
ஊழியர்களுக்கு என்ன பலன்?

இந்தக் குழு நியமிக்கப்பட்ட நாளிலிருந்து 18 மாதங்களுக்குள் தனது பரிந்துரைகளை மத்திய அரசிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

இதன் மூலம், சுமார் 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் 69 லட்சம் ஓய்வூதியதாரர்களின் சம்பளம், படிகள் மற்றும் ஓய்வூதியங்கள் மறுபரிசீலனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய ஊதியக் குழுவின் பரிந்துரைகள் பொதுவாக ஜனவரி 1, 2026 முதல் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், குழுவின் செயல்பாடு தற்போது வேகமெடுத்துள்ளது மத்திய அரசு ஊழியர்களுக்குப் பெரிய நம்பிக்கையை அளித்துள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories