FASTag இல்லையா? நம்பர் பிளேட்டை மறைத்தால் 5 மடங்கு சுங்க கட்டணம்..! மத்திய அரசு அதிரடி எச்சரிக்கை

Published : Nov 28, 2026, 10:30 AM IST

FASTag ஒட்டாமல் அல்லது நம்பர் பிளேட்டை மறைத்து தடையில்லா சுங்கச்சாவடிகளில் கட்டண ஏய்ப்பில் ஈடுபட்டால் 5 மடங்கு அபராதம் விதிக்கப்படும் என அரசு எச்சரித்துள்ளது. தமிழகத்தில் பரனூர், நெமிலி உட்பட 9 இடங்களில் இந்த வசதி செயல்பாட்டில் உள்ளது.

PREV
13
தடையில்லா சுங்கச்சாவடி

புதிய தடையில்லா சுங்கச்சாவடிகளில் கட்டணம் செலுத்துவதைத் தவிர்க்க வாகனத்தின் நம்பர் பிளேட்டை மறைத்தாலோ, FASTag ஒட்டாமல் சென்றாலோ இனி தப்பிக்க முடியாது. இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் வாகன உரிமையாளர்களுக்கு வழக்கமான சுங்கக் கட்டணத்தை விட 5 மடங்கு அபராதம் விதிக்கப்படும் என மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் (MoRTH) எச்சரித்துள்ளது.

வாகனங்களின் பதிவு எண்களை மறைப்பது, நம்பர் பிளேட்டில் முறைகேடு செய்வது அல்லது FASTag ஒட்டாமல் செல்வது ஆகியவை சுங்கக் கட்டணத்தைத் தவிர்ப்பதற்காக வேண்டுமென்றே செய்யப்படும் செயல்களாகக் கருதப்படும் என அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், "சுங்கக் கட்டணத்தைத் தவிர்ப்பதற்காக வாகனத்தின் பதிவு எண்ணை மறைப்பது, மாற்றுவது அல்லது மறைத்துக் கொண்டு செல்வது, FASTag ஒட்டாமல் இருப்பது போன்றவை திட்டமிட்ட கட்டண ஏய்ப்பு நடவடிக்கைகளாகும். இதற்கு ஐந்து மடங்கு கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். எனவே, வாகன ஓட்டிகள் தங்களது பதிவு எண்கள் எப்போதும் தெளிவாகத் தெரியும் வகையில் வைத்திருக்க வேண்டும். உரிய சுங்கக் கட்டணத்தையும் செலுத்த வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.

23
தடையில்லா சுங்கச்சாவடி என்றால் என்ன..?

தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தடையில்லா சுங்கக் கட்டண வசதி, மல்டி லேன் ஃப்ரீ ஃப்ளோ (Multi-Lane Free Flow - MLFF) என அழைக்கப்படுகிறது. இந்தத் தொழில்நுட்பத்தின் மூலம் வாகனங்கள் சுங்கச்சாவடிகளில் நிற்காமலேயே கட்டணம் தானாக வசூலிக்கப்படும்.

இதற்காக சுங்கச்சாவடிகளில் அமைக்கப்பட்டுள்ள உயரமான மின்னணு கட்டமைப்புகளில் FASTag வாசிப்புக் கருவிகள் மற்றும் தானியங்கி நம்பர் பிளேட் அடையாளம் காணும் கேமராக்கள் (ANPR) பொருத்தப்பட்டுள்ளன.

இவை வாகனத்தின் FASTag மற்றும் பதிவு எண்ணை அடையாளம் கண்டு, அதற்கான சுங்கக் கட்டணத்தைத் தானாகவே வசூலிக்கும். இதனால் வாகனங்கள் சுங்கச்சாவடிகளில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய அவசியம் இருக்காது.

மேலும், போக்குவரத்து நெரிசல், காத்திருப்பு நேரம், எரிபொருள் பயன்பாடு மற்றும் வாகனங்களால் ஏற்படும் மாசுபாடு ஆகியவற்றையும் குறைக்க முடியும்.

33
தமிழகத்தில் 3 இடங்கள் உட்பட 9 இடங்களில் MLFF வசதி!

இந்தியாவில் முதலாவது தடையில்லா சுங்கச்சாவடி வசதி கடந்த மே மாதம் குஜராத்தின் சோர்யாசி சுங்கச்சாவடியில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து நாட்டின் மேலும் 8 இடங்களில் இந்தத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, டெல்லியின் முண்ட்கா, ஹரியானாவின் கர்னால் மாவட்டத்தில் உள்ள கரோண்டா, ராஜஸ்தானில் தௌலத்புரா, மனோஹர்புரா, ஷாஜஹான்பூர் ஆகிய இடங்களிலும் இந்த வசதி செயல்படுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தைப் பொறுத்தவரை பரனூர், நெமிலி, சென்னசமுத்திரம் ஆகிய மூன்று சுங்கச்சாவடிகளில் தடையில்லா சுங்கக் கட்டண வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த MLFF தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு சுங்கக் கட்டண வருவாய் கணிசமாக அதிகரித்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எனவே, தடையில்லா சுங்கச்சாவடிகளில் கட்டணம் செலுத்துவதைத் தவிர்க்க நம்பர் பிளேட்டை மறைப்பது அல்லது FASTag இல்லாமல் பயணிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவோர் இனி கூடுதல் தொகையைச் செலுத்த வேண்டியிருக்கும் என்பது வாகன ஓட்டிகள் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயமாகும்.

Read more Photos on
click me!

Recommended Stories