தொண்டையில் மீன் முள் சிக்கினால் என்ன செய்வது? வாங்க தெரிஞ்சுக்கலாம்..!!

First Published Jun 4, 2023, 6:00 PM IST

மீன் சாப்பிடுவதால், உடலுக்கு வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் கிடைக்கும். மீன் சாப்பிடும் போது சிலருக்கு தொண்டையில் மீன் முள் சிக்கிக் கொள்ளும். இந்த அபாயகரமான நிலையைப் போக்க, தொண்டையில் உள்ள மீன் முள்ளை அகற்ற என்ன செய்ய வேண்டும் என்று பார்க்கலாம் வாங்க..

மீன், கடல் உணவுகளில் மிகவும் ஆரோக்கியமான உணவாகும். எனவே இதனை உணவில் சேர்த்துக்கொள்ள மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். ஆனால் சிலருக்கு மீன் சாப்பிடும் போது தொண்டையில் மீன் முள் சிக்கிக் கொள்வதுண்டு. இதனை சரியான நேரத்தில் அகற்றப்படாவிட்டால், அது உணவுக் குழாயைக் கிழித்துவிடும்.

மீன் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்:

மீனில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், வைட்டமின் டி, வைட்டமின் பி2, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, ஜிங்க், அயோடின், புரதம் உள்ளது. இது மூளை, எலும்புகள், தசைகளை வலுப்படுத்த வேலை செய்கிறது. ஆனால் மீன் சாப்பிடும் போது அதன் முள் தொண்டையில் சிக்கினால் என்ன செய்வது என்று தெரியவில்லையா? வாங்க தெரிஞ்சுக்கலாம்.

இதையும் படிங்க: ஜூன் மாசத்துக்கும் ரொட்டிக்கும் இப்படியும் ஒரு தொடர்பு இருக்குதா? சுவாரசியமான வரலாற்று தகவல்!!

தொண்டையில் மீன் முள் சிக்கியிருப்பதை எப்படி அறிவது?
உண்மையில், மீன் முள் சில நேரங்களில் கூர்மையான மற்றும் குறுகியதாக இருக்கும். நீங்கள் தற்செயலாக அவற்றை விழுங்கும்போது பின்வரும் அறிகுறிகள் தோன்றக்கூடும்.

அறிகுறிகள்:

சளியில் இரத்தம்
அதிகப்படியான இருமல்
தொண்டையில் அரிப்பு, வலி
உணவு விழுங்கும் போது வலி
தண்ணீர் குடிப்பதில் சிரமம்
கழுத்தின் அடிப்பகுதியில் கனம் 
 

மீன் முள்ளை நீக்க சில வீட்டு வைத்தியம்:

சத்தமாக இருமல்
ஒரு பெரிய வாழைப்பழத்தை விழுங்குவது
சோடா குடிப்பது வயிற்றில் உள்ள மீன் முள்ளைக் கரைக்கும்
ரொட்டியை சில நொடிகள் தண்ணீரில் ஊறவைத்து சாப்பிடவும்
1 தேக்கரண்டி ஆலிவ் எண்ணெயைக் குடிப்பது நல்லது. 
குழம்பு சேர்க்காமல் வெறும் சாதம் சாப்பிட்டாலும் முள் போய்விடும்.

இந்த அறிகுறி இருந்தா கண்டிப்பாக மருத்துவமனைக்கு விரைந்து செல்லுங்கள்:
மீன் எலும்பு மிகவும் மெல்லியதாக இருக்கும், இது உணவுக்குழாய் அல்லது தொண்டையை சேதப்படுத்தும். இதன் காரணமாக, பின்வரும் சிக்கல்கள் தோன்றும். இந்த அறிகுறியை நீங்கள் அனுபவித்தால், உடனடியாக மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும்.

அறிகுறிகள்:
மார்பு வலி
சளியில் இரத்தம்
தொண்டையில் வீக்கம் மற்றும் சிராய்ப்பு 
எதையும் சாப்பிடவோ அல்லது குடிக்கவோ முடியவில்லை

மீன் முள் சிக்கலின் அபாயத்தைக் குறைக்க, சிறு குழந்தைகள், முதியவர்கள், பற்கள் இல்லாதவர்கள், தசைகள் தேய்மானம் உள்ள நோயாளிகள், பெருமூளை வாதம் உள்ள நோயாளிகளுக்கு முள்ளில்லாத மீன்களைக் கொடுக்க வேண்டும். ஏனெனில், அவர்களின் தொண்டையில் மீன் எலும்பு சிக்கிக்கொள்ளும் அபாயம் அதிகம். மேலும், ஒரே நேரத்தில் மிக விரைவாக ஒரு பெரிய துண்டு சாப்பிடுவதை தவிர்க்கவும்.

click me!