
உடல் எடையை குறைக்க வேண்டும் என்று விரும்புவரா நீங்கள்? ஆம் எனில், உங்கள் அன்றாட வழக்கத்தில் சில எளிய மற்றும் பயனுள்ள பழக்கங்களை சேர்ப்பதன் மூலம் வேகமாக உடல் எடையை குறைக்க முடியும்.. உங்கள் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துவது முதல் பசியைக் கட்டுப்படுத்துவது வரை, நீங்கள் எப்படி விரைவாக எடையைக் குறைக்கலாம் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்..
சீரக தண்ணீர்
காலையில் எழுந்த உடனே ஒரு கிளாஸ் சீரக தண்ணீரை குடிப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். இதன் மூலம் உங்கள் வளர்சிதை மாற்றத்தைத் தொடங்கலாம். சீரக நீர் பொதுவாக தன்தன் செரிமான பண்புகளுக்கு பெயர் பெற்றது. மேலும் உங்கள் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவுவதுடன் எடை குறைக்கவும் பயன்படுகிறது.
ஆரோக்கியமான தின்பண்டங்கள்
ஆரோக்கியமற்ற தின்பண்டங்களைத் தேடுவதற்குப் பதிலாக, பசியைத் தடுக்க உலர் பழங்கள் மற்றும் பழங்கள், நட்ஸ் என ஆரோக்கியமான தின்பண்டங்களை சாப்பிட தொடங்குங்கள். இந்த தின்பண்டங்கள் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களால் நிரம்பியுள்ளது. மேலும் நாள் முழுவதும் உங்களை திருப்தியாகவும் உற்சாகமாகவும் வைத்திருக்கும்.
50 நிமிட உடற்பயிற்சி
உங்கள் நாளின் 50 நிமிடங்களை உடற்பயிற்சிக்காக ஒதுக்குங்கள். வழக்கமான உடற்பயிற்சி கலோரிகளை எரிப்பதற்கும் அந்த கூடுதல் எடையை குறைப்பதற்கு முக்கிய பங்கு வகிக்கிறது.
கிரீன் டீ
உங்கள் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும், கொழுப்பை கரைக்கவும் ஒரு நாளைக்கு இரண்டு முறை கிரீன் டீயை பருகவும். ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் கேட்டசின்கள் நிரம்பிய கிரீன் டீ, ஆரோக்கியமான உணவாகும். உடற்பயிற்சி உடன் கிரீன் டீயையும் இணைத்தால் உடல் எடையை எளிதாக குறைக்க உதவும்.
சர்க்கரையை குறைப்பது
உடல் எடையை குறைக்க விரைவான வழிகளில் ஒன்று சர்க்கரையை குறைப்பதாகும். சர்க்கரை பானங்கள், தின்பண்டங்கள் மற்றும் இனிப்புகளைத் தவிர்க்கவும், அதற்கு பதிலாக ஆரோக்கியமான மாற்று உணவுகளை சாப்பிடவும். இந்த எளிய மாற்றம் உங்கள் கலோரி அளவைக் கணிசமாகக் குறைத்து எடை இழப்பை ஊக்குவிக்கும்.
தரமான தூக்கம்
ஒவ்வொரு இரவும் நீங்கள் குறைந்தது 7 மணிநேரம் தரமான தூக்கத்தைப் பெறுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். மோசமான தூக்கம் ஹார்மோன் அளவை சீர்குலைத்து, பசியை அதிகரிக்கும், இது எடை இழக்க கடினமாக்குகிறது. உங்கள் எடை இழப்பு இலக்குகளை ஆதரிக்க நிலையான தூக்க அட்டவணையை பின்பற்றுவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்
தண்ணீர் குடியுங்கள்
நாள் முழுவதும் 8-10 கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும்.. நீரேற்றமாக இருப்பது நச்சுகளை வெளியேற்ற உதவுவது மட்டுமல்லாமல், உங்களை முழுதாக உணர வைக்கிறது, அதிகப்படியான உணவைத் தடுக்கிறது. உங்கள் நீரேற்றம் இலக்குகளுடன் தொடர்ந்து இருக்க நீங்கள் எங்கு சென்றாலும் தண்ணீர் பாட்டிலை எடுத்துச் செல்வதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.
இரவு உணவிற்கு பின் நடைபயிற்சி
இரவு உணவுக்குப் பிறகு, 20 நிமிடங்கள் நிதானமாக நடக்கவும். இது செரிமானத்திற்கு உதவுவது மட்டுமின்றி, இரத்த சர்க்கரை அளவை சீராக்க உதவுகிறது. இரவு நேர சிற்றுண்டியை தடுப்பதுடன், எடை இழப்புக்கு பங்களிக்கிறது.