Vaginal Dryness : பெண்களே! பிறப்புறுப்பு வறட்சியை அலட்சியம் செய்யாதீங்க; தேங்காய் எண்ணெயை 'இப்படி' யூஸ் பண்ணுங்க!

Published : Dec 26, 2025, 05:18 PM IST

பிறப்புறுப்பு வறட்சிக்கு தேங்காய் எண்ணெய் பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் தீமைகள் குறித்து இந்த பதிவில் காணலாம்.

PREV
14
Vaginal Dryness

பிறப்புறுப்பு வறட்சி என்பது பெண்களுக்கு வரும் ஒரு பொதுவான பிரச்சனை. மாதவிடாய் காலம் அல்லது சில மருந்துகள் சாப்பிடுவதால் பெண்களுக்கு அடிக்கடி பிறப்புறுப்பில் வறட்சி ஏற்படும். பிறப்புறுப்பு வளர்ச்சியால் பிறப்புறுப்பில் அரிப்பு, வலி, எரிச்சல் உணர்வு மற்றும் உடலுறவில் சிரமம் கொஞ்சம் பல பிரச்சனைகளை பெண்கள் எதிர் கொள்கின்றனர்.

பிறப்புறுப்பு வறட்சியை போக்க பலர் பிறப்புறுப்பில் தேங்காய் எண்ணெயை பயன்படுத்துகிறார்கள். உண்மையில் பிறப்புறுப்பில் தேங்காய் எண்ணெயை பயன்படுத்தலாமா? அது பாதுகாப்பானதா? இது குறித்து விரிவாக இந்த பதிவில் பார்க்கலாம்.

24
பிறப்புறுப்பு வறட்சியை போக்க தேங்காய் எண்ணெய் நல்லதா?

தேங்காய் எண்ணெய் ஒரு சிறந்த மாய்ஸ்சரைசர் ஆகும். இதனாலயே பெரும்பாலானோர் முடிக்கு மட்டுமல்ல உடலுக்கு இதை பயன்படுத்துகின்றனர். இது சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்து சரும வறட்சியை நீக்க உதவுகிறது.

பிறப்புறுப்பு வறட்சியை போக்க தேங்காய் எண்ணெய் பயன்படுத்தலாம். இது யோனி வறட்சியை போக்கி பிறப்புறுப்பை ஹைட்ரேட்டாக வைக்கும். மேலும் அந்தரங்க சருமத்தை ஈரப்பதமாக வைத்திருக்க பெரிதும் உதவுகிறது. குறிப்பாக இதை பயன்படுத்துவது நீண்ட கால உடலுறவை அனுமதிக்கின்றது.

34
யோனியில் தேங்காய் எண்ணெயை எப்போது பயன்படுத்தக் கூடாது?

- பிறப்புறுப்பு வறட்சியை போக்க தேங்காய் எண்ணெய் பயன்படுத்துவது பாதுகாப்பானது என்றாலும், சில பெண்கள் பிறப்புறுப்பில் தேங்காய் எண்ணெயை பயன்படுத்தக் கூடாது. அதாவது ஈஸ்ட் தொற்றுள்ள பெண்கள் பிறப்புறுப்பில் தேங்காய் எண்ணெய் தடவக்கூடாது. மருத்துவரிடம் ஆலோசனை கேட்ட பிறகு தான் பயன்படுத்த வேண்டும்.

- அதுபோல பிறப்புறுப்பில் தொற்று ஏற்பட்டாலும் பிறப்புறுப்பில் தேங்காய் எண்ணெயை தடவ வேண்டாம். பிறப்புறுப்பு தொற்றிலிருந்து குணமாக யோனியை எப்போதும் சுத்தமாக வைக்க வேண்டும்.

44
நினைவில் கொள் :

பிறப்புறுப்பு வறட்சியை போக்க பல வகையான மாய்ஸ்ரைசர்கள் சந்தையில் விற்பனையாகின்றன. அவற்றை நீங்கள் பயன்படுத்த விரும்பினால் ஒரு முறை மருத்துவரிடம் ஆலோசனை கேட்பது நல்லது.

Read more Photos on
click me!

Recommended Stories