Nail biting : நகம் கடிக்கும் பழக்கம் இருக்கா? அலட்சியம் வேண்டாம்..வரும் பிரச்சனைகள் என்னென்ன?

Published : Sep 05, 2026, 04:57 PM IST

Nail biting : நகம் கடிக்கும் பழக்கம் உங்களுக்கு இருக்கிறதா? தொடர்ந்து நகம் கடிப்பதால் தொற்று, நக வளர்ச்சியில் பாதிப்பு உள்ளிட்ட என்னென்ன பிரச்சனைகள் ஏற்படலாம்? மருத்துவர்கள் கூறும் தகவல்கள் இதோ.

PREV
14
நகம் கடிக்கும் பழக்கம் இருக்கா?

டென்ஷன், பதற்றம், சலிப்பு அல்லது ஏதாவது ஒரு விஷயத்தில் கவனம் செலுத்தும்போது நமக்கு தெரியாமலேயே நகம் கடிக்கும் பழக்கம் பலருக்கும் இருக்கும். இது சிறிய பழக்கம் போலத் தெரிந்தாலும், அதை தொடர்ந்து செய்வது நகங்கள் மற்றும் அதைச் சுற்றியுள்ள தோலில் பாதிப்பை ஏற்படுத்துவதுடன், தொற்று ஏற்படவும் வாய்ப்புள்ளதாக தோல் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

24
நகத்தைச் சுற்றி தொற்று ஏற்படலாம்

நகத்தை கடிக்கும்போது, நகத்தைச் சுற்றியுள்ள தோலில் சிறிய காயங்கள் அல்லது வெட்டுகள் ஏற்படலாம். இந்தக் காயங்கள் வழியாக வாயில் இருக்கும் பாக்டீரியா, வைரஸ் உள்ளிட்ட கிருமிகள் தோலுக்குள் சென்று தொற்று ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக Paronychia எனப்படும் தொற்று ஏற்படலாம். இதனால் அந்தப் பகுதியில் சிவத்தல், வீக்கம், வலி போன்ற அறிகுறிகளுடன், சில நேரங்களில் சீழ் உருவாகவும் வாய்ப்புள்ளது.

34
நகத்தின் வளர்ச்சியும் பாதிக்கலாம்

தொடர்ந்து நகத்தை கடிப்பதால், நகத்தின் வளர்ச்சிப் பகுதி மற்றும் அதைச் சுற்றியுள்ள cuticle பகுதியில் மீண்டும் மீண்டும் காயம் ஏற்படலாம். இதன் காரணமாக நகம் சீரற்ற முறையில் வளர்வது, நகத்தில் கோடுகள் தோன்றுவது, நகம் எளிதில் உடைவது போன்ற பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. நீண்ட காலமாக நகம் கடிக்கும் பழக்கம் இருந்தால், நகத்தின் இயல்பான தோற்றமும், வளர்ச்சியும் பாதிக்கப்படும் என அமெரிக்கன் அகாடமி ஆஃப் டெர்மடாலஜி (AAD) குறிப்பிடுகிறது.

44
ஏன் இந்தப் பழக்கம் வருகிறது?

பலருக்கு stress, boredom அல்லது anxiety போன்ற சூழ்நிலைகளில் நகம் கடிக்கும் பழக்கம் அதிகரிக்கலாம். சிலருக்கு இது தன்னைத்தானே அமைதிப்படுத்திக் கொள்ளும் ஒரு பழக்கமாகவும் மாறலாம் என மருத்துவ ஆய்வுக் கட்டுரைகளிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. தொடர்ந்து முயன்றும் இந்தப் பழக்கத்தை கட்டுப்படுத்த முடியவில்லை என்றால் மருத்துவர் அல்லது மனநல நிபுணரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.

Read more Photos on
click me!

Recommended Stories