டயட் இருக்காமல் ஈஸியா எடையை குறைக்க சூப்பர் டிப்ஸ்!! 

Published : May 06, 2025, 08:14 AM IST

டயட் இல்லாமல் எடை குறைக்க ஐந்து அற்புதமான  வழிகள் என்னென்ன என்பதை இங்கு காணலாம். 

PREV
15
டயட் இருக்காமல் ஈஸியா எடையை குறைக்க சூப்பர் டிப்ஸ்!! 
உடல் எடையை குறைக்கும் வழிகள் (Lose Weight Without Dieting)

நம்மை நாம் நேசிப்பது நம் மீது நாம் கொண்டுள்ள அக்கறையில் வெளிப்படும். நமது உடலை அதன் எல்லா விதமான தோற்றத்திலும் நேசிக்க வேண்டும். ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்வது, சுய அன்பை கொண்டிருப்பது அவசியமானது. நம் உடல் நமக்கு கொடுக்கும் சிக்னலுக்கு ஏற்ப செயல்பட வேண்டும். பசிக்கும்போது மட்டுமே சாப்பிட வேண்டும். பசி அடங்கும்போது சாப்பிடுவதை நிறுத்த வேண்டும். அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதை குறைக்க வேண்டும். இது மட்டுமின்றி உடல் எடையை குறைக்கும் 5 வழிகளை இங்கு காணலாம். 

25
சர்க்கரை வேண்டாம்! (No Sugar)

சர்க்கரை சேர்ப்பது உடல் எடையை அதிகப்படுத்தக் கூடியது. சர்க்கரையை எடுத்து கொள்வதை குறைப்பது தொப்பை கொழுப்பைக் குறைக்க முக்கியமான வழியாகும். சர்க்கரை கலந்த பானங்கள் தவிர்த்து தண்ணீர், இனிப்பு இல்லாத தேநீர் அல்லது கருப்பு காபியை அருந்தலாம். கடையில் வாங்கும் உணவுகளின் லேபிள்களை  படித்து, அதில் மறைக்கப்பட்ட சர்க்கரை இருந்தால் தவிருங்கள். இனிப்பு சாப்பிடத் தோன்றினால்  பழங்கள் உண்ணுங்கள். சத்தான உணவுகளை உண்பது நல்லது.  

35
கொழுப்பைக் குறைக்கும் உணவுகள்: (Weight Loss Foods)

கிரீன் டீ: 

கிரீன் டீயில் உள்ள EGCG என்ற எபிகல்லோகேடசின்-3-கேலேட் கொழுப்பு குறைய உதவும். 

ஒமேகா-3 நிறைந்த மீன்: 

இந்த மீன் இதய ஆரோக்கியத்திற்கு நல்லது.  வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து கொழுப்பைக் குறைக்கும். 

ஆப்பிள் சைடர் வினிகர்: 

உணவுக்கு பின் தண்ணீரில் ஆப்பிள் சைடர் வினிகர் கலந்து குடித்தால் எடை குறைய உதவுகிறது. ஜப்பானில் இந்தப் பழக்கம் உள்ளது. 

மற்ற உணவுகள்

மிளகாயில் உள்ள கேப்சைசின் கொழுப்பை எரிக்கும் செயல்முறையை துரிதப்படுத்தக் கூடியது. ஆலிவ் எண்ணெய், முட்டைகளும் நல்லது. 

45
சுறுசுறுப்பான வாழ்க்கை முறை:  (Active Lifestyle)

ஒரே இடத்தில் இருப்பதை விட அதிகம் நகர்வது உடல் எடையை குறைக்க உதவும். அமர்ந்த நிலையில் வேலை பார்ப்பவராக இருந்தால் ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை 5 நிமிடங்களாவது நடப்பது நல்லது. உடற்பயிற்சி செய்வது ஆரோக்கியமான வாழ்க்கை முறையாகும். கடினமான ஜிம் உடற்பயிற்சிகளுக்கு பதில் எளிய பயிற்சிகளை செய்யலாம். நடனம், நீச்சல், நடைபயிற்சி கூட நல்லது. 

55
சாப்பிடும்போது கவனம்! (Minduful Eating)

சாப்பிடும்போது டிவி, செல்போன் பார்ப்பதை தவிர்த்து சாப்பாட்டில் மட்டும் கவனம் செலுத்துங்கள்.  உணவின் வாசனை, சுவை போன்றவற்றை கவனித்து ரசித்து ருசித்து பசி மற்றும் நிறைவான உணர்வு ஆகியவற்றை கவனித்து உண்ணுங்கள்.  இந்தப் பழக்கங்கள் உங்களுடைய எடையை கணிசமாக குறையச் செய்யும்.

Read more Photos on
click me!

Recommended Stories