கனமான பொருட்களை தூக்குவதை தவிர்க்கவும்: பிரசவத்திற்குப் பிறகு, பெண்கள் தம்மையும் பிறந்த குழந்தையையும் வீட்டு வேலைகளையும் கவனித்துக் கொள்ள வேண்டும். இதுபோன்ற சந்தர்ப்பங்களில், அவர்கள் தண்ணீர் நிரப்பப்பட்ட வாளிகள், துவைத்த துணிகள் போன்ற கனமான பொருட்களை அடிக்கடி தூக்குகிறார்கள்.
இத்தகைய கனமான பொருட்களை தூக்குவதால் வயிற்றில் அதிக அழுத்தம் ஏற்படுகிறது. இது வயிற்று வலி அல்லது நடப்பதில் சிரமத்தை ஏற்படுத்தலாம். எனவே, கனமான பொருட்களை தூக்குவதை தவிர்க்கவும்.