முத்து போன்ற வெள்ளை பற்கள் கேரண்டி! கண்டிப்பா இந்த பழங்களை சாப்பிடுங்க!

First Published | May 6, 2023, 7:45 AM IST

சில பழங்களை தினமும் சாப்பிட்டு வந்தால் பற்கள் பளபளப்பாகவும், ஆரோக்கியமாகவும் மாறும். 

நம்முடைய பற்களின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது மிகவும் அவசியம். நாம் உணவை நன்றாக மென்று சாப்பிட்டால் தான் உணவு விரைவில் ஜீரணமாகும். உணவை மெல்லும் வேலையை பற்கள் செய்கின்றன. ஒருவேளை பற்களால் உணவை சரியாக ஜீரணிக்க முடியாமல் போகும்பட்சத்தில், செரிமானத்தை மோசமாக பாதிக்கிறது. பல் ஆரோக்கியம் மிகவும் முக்கியம். 

பற்களின் ஆரோக்கியத்தை பேணி பாதுகாக்கவும், வாய் சுகாதாரத்தை கடைபிடிக்கவும் சில பழங்கள் உதவுகின்றன. அவை பற்களை வலுவாகவும், பளபளப்பாகவும் மாற்றுவதற்கு உதவும். கால்சியம் நிறைந்த உணவுகள் நமது எலும்புகளுக்கு மட்டுமல்ல, பற்களுக்கும் நல்லது என்கின்றனர் நிபுணர்கள். 

Tap to resize

வாழைப்பழம் 

வாழைப்பழத்தில் இரும்புச்சத்தும் கால்சியமும் நிறைந்துள்ளது. இது நம் பற்களுக்கு மிகவும் நல்லது என கருதப்படுகிறது. வாழைப்பழம் பற்களில் உள்ள அழுக்கை சுத்தம் செய்து வலுவாக வைக்க உதவுகிறது. வாழைப்பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் பற்கள் வலுவடையும். வாழைப்பழம் பாக்டீரியாவை அகற்ற உதவுகிறது. எனவே, பற்களில் படிந்திருக்கும் அழுக்குகளை நீக்குகிறது. வாழைப் பழத்தோலால் பற்களை சுத்தம் செய்யலாம். 

ஆரஞ்சு 

ஆரஞ்சு பழத்தில் வைட்டமின்கள், கனிம தாதுக்கள் ஏராளமாக உள்ளன. இதில் நார்ச்சத்தும் அதிகம். ஆரஞ்சு பற்களுக்கு நல்லது என்று கருதப்படுகிறது. சாப்பிடுவது மட்டுமல்ல, ஆரஞ்சு தோலைப் பொடியாகக் கொண்டு பற்களையும் சுத்தம் செய்யலாம். வெள்ளையாக பற்கள் ஜொலிக்கும். 

தர்பூசணி 

கோடையில் தர்பூசணி ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது என்று கருதப்படுகிறது. இதில் மெக்னீசியம், துத்தநாகம், பொட்டாசியம், இரும்பு, அயோடின் நிறைந்துள்ளது. இது பற்களை வலுப்படுத்த வேலை செய்கிறது. 

ஸ்ட்ராபெர்ரி 

ஸ்ட்ராபெர்ரியில் மாலிக் அமிலம் உள்ளது. இது பற்களில் படிந்துள்ள அழுக்குகளை அகற்ற உதவுகிறது. இதில் உள்ள நார்ச்சத்து, பற்களில் உள்ள பாக்டீரியாக்களை நீக்கி, பற்களுக்கு நல்ல பொலிவைத் தருகிறது. 

ஆப்பிள்

ஆப்பிளில் உள்ள ஊட்டச்சத்துக்கள் காரணமாக, அதை தினமும் சாப்பிட நிபுணர்கள் பரிந்துரை செய்கிறார்கள். ஆப்பிள் சாறு பற்களின் மஞ்சள் நிறத்தை முற்றிலும் நீக்கி முத்து போன்ற பற்களை தருகிறது.

Latest Videos

click me!