நடந்தாலே கால் வலிக்குதா? இதை மட்டும் சாப்பிடுங்க.. ரொம்ப ஸ்ட்ராங்கா ஆகிடும்!!

Published : Feb 11, 2025, 07:43 PM IST

Leg Strengthening Foods : பலவீனமாக இருக்கும் உங்களது கால்களை வலுவாக மாற்ற கீழே கொடுக்கப்பட்டுள்ள விஷயங்களை மட்டும் செய்தால் போதும்.   

PREV
15
நடந்தாலே கால் வலிக்குதா? இதை மட்டும் சாப்பிடுங்க.. ரொம்ப ஸ்ட்ராங்கா ஆகிடும்!!
நடந்தாலே கால் வலிக்குதா? இதை மட்டும் சாப்பிடுங்க.. ரொம்ப ஸ்ட்ராங்கா ஆகிடும்!!

நம்முடைய தினசரி வேலைகளை செய்வதற்கு கால்கள் வலுவாக இருப்பது மிகவும் முக்கியம். தினமும் உடற்பயிற்சி செய்வது, சத்தான உணவை சாப்பிடுவது உங்களது கால்களுக்கு புதிய உயிரை கொடுக்கும். இதனால் நீங்கள் எந்தவித இடரலுமின்றி முறையாக வேலை செய்ய முடியும். இதுவே கால்களுக்கு வலிமை இல்லை என்றால், சிறிது நேரம் நடந்தால் கூட வலி ஏற்படும். இன்னும் சொல்லப் போனால் சிறிது நேரம் நின்றாலும் உடல் நடுங்க தொடங்கும். பெரும்பாலான மக்களுக்கு பலவீனமான கால் தசைகள் இருக்கின்றன. இதன் காரணமாக அவர்கள் எப்போதும் சோர்வாகவும் மற்றும் பலவீனமாகவே இருப்பார்கள். இத்தகையவர்களால் எந்த உடல் வேலையையும் சரியாக கூட செய்ய முடியாமல் போகும். எனவே, பலவீனமாக இருக்கும் உங்களது கால்களுக்கு பலத்தைக் கொண்டு வர, உடற்பயிற்சியுடன் சில சூப்பர் ஃபுட்களையும் எடுத்துக் கொள்ளுங்கள்.

25
பாதாம் :

உங்களது கால்கள் தசைகள் அடிக்கடி தொய்ந்து போனால், அவற்றை வலிமையாக்குவதற்கு சத்தான உணவு ரொம்பவே முக்கியம். இதற்கு பாதாம் உங்களுக்கு உதவும். ஆம், பாதாம் உங்களது கால்களுக்கு புதிய உயிரை கொடுக்கும். ஏனெனில் பாதாமில் புரதம், கால்சியம், ஆக்சிஜனேற்றிகள் போன்ற பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன. அவை உங்களது கால்களை வலிமையாக்கும். இதற்கு நீங்கள் ஊற வைத்த பாதாமை தினமும் காலை சாப்பிடுங்கள்.

35
கோழி மார்பகம்:

சிக்கனின் மார்பகப் பகுதி பலவீனமாக இருக்கும் உங்களது கால்களை வலுப்படுத்த உதவும் ஒரு சத்தான உணவாகும். நீங்கள் அசைவ பிரியராக இருந்தால் கோழி மாறுபாகத்தை சாப்பிடுவதன் மூலம் உங்களது கால்களுக்கு பலத்தை கொடுக்க முடியும். கோழியின் மார்பு பகுதியில் கொழுப்பு குறைவாகவும், போதுமான அளவும் கார்போஹைட்ரேட்டுகள் உள்ளன. எனவே கால்களை வலுப்படுத்த கோழி மார்பகம் சிறந்த தேர்வாகும்.

இதையும் படிங்க: உட்கார்ந்திருக்கும் போது கால் ஆட்டும் பழக்கம் உள்ளவரா? உடனே நிறுத்துங்க.. இல்லைன்னா அவ்வளவுதான்..!

45
டோஃபு:

சூப்பர் புரதத்தின் சிறந்த மூலம் என்பதால், இது பலவீனமாக இருக்கும் உங்களது கால்களை வலிமையாக்கும் முக்கியமாக சைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு இது போதுமான அளவு புரதத்தை வழங்கும். எனவே உங்களது கால்களுக்கு நீங்கள் சக்தி கொடுக்க விரும்பினால், டோஃபு சாப்பிடுங்கள்.

இதையும் படிங்க:  நீண்ட நேரம் உட்கார்ந்திருந்தால் கால்கள் வீங்குகிறதா? இதெல்லாம் தான் காரணங்கள்..

55
குயினோவா:

இதுவும் புரதத்தின் சிறந்த மூலமாகும்.  இது திணை வகைகளின் கீழ் வருகின்றது. குயினோவாவில் ஊட்டச்சத்துக்களைத் தவிர பல வகையான நின் ஊட்டச்சத்துக்களும் உள்ளது. இதில் பல வகையான அத்தியாவசிய அமினோ அமிலங்கள் உள்ளன அவை கால்கள் வலுப்படுத்த உதவும்.

Read more Photos on
click me!

Recommended Stories