நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்படும் பாலியல் பிரச்னைகள்- முழு விபரம்..!!

First Published | Feb 22, 2023, 2:29 PM IST

நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தவில்லை என்றால், அது படிப்படியாக பல்வேறு நோய் பாதிப்புகள் ஏற்படுவதற்கு வழிவகுக்கிறது. அதில் பாலியல் சார்ந்த பிரச்னைகளும் அடங்கும்.
 

நீரிழிவு நோய் பாதிப்பை ஒரு வாழ்க்கை முறை நோய் என்று மருத்துவ ஆதாரங்கள் கூறுகின்றன. எனினும் கடந்த காலத்துடன் ஒப்பிடுகையில், நீரிழிவு நோயின் முக்கியத்துவம் மற்றும் பிற உடல்நலப் பிரச்சினைகள் மற்றும் நீரிழிவு நோயால் ஏற்படக்கூடிய நோய்கள் பற்றிய விழிப்புணர்வு அதிகமாக உள்ளது. நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தவில்லை என்றால், அது படிப்படியாக பல தொடர்புடைய உடல்நலப் பிரச்சினைகள் மற்றும் நோய்கள் ஏற்பட வழிவகுக்கிறது. அந்தவகையில், நீரிழிவு நோயாளிகளிடமும் பாலியல் பிரச்சனைகள் ஏற்படும் அபாயம் அதிகமாகக் காணப்படுகிறது..
 

நீரிழிவு நோயாளிகளுக்கு ஏன் பாலியல் பிரச்சனைகள் ஏற்படுகின்றன?

நீரிழிவு நோய் அதிகரிக்கும் போது, ரத்த நாளங்கள் மற்றும் நரம்புகளை பாதிக்கிறது. இதனால் சீரான ரத்த ஓட்டம் தடைபடும் நிலை ஏற்படுகிறது. ஆணுறுப்பு உள்ளிட்ட உடலுறுப்புகளுக்கு இரத்த ஓட்டம் குறையும்போது, ​​விறைப்புத்தன்மையும், பாலுணர்வும் குறைந்து போகும். சிலருக்கு இரத்த ஓட்டம் குறைவதால் உணர்வின்மையும் ஏற்படுகிறது. இவை அனைத்தும் பாலியல் வாழ்க்கையில் எதிர்மறையான விளைவை ஏற்படுத்தும்.
 

Latest Videos


நீரிழிவு நோயால் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள்

நீரிழிவு நோய் ஹார்மோன் சமநிலையின்மையையும் ஏற்படுத்தும். இனப்பெருக்க ஹார்மோன்களான டெஸ்டோஸ்டிரோன் மற்றும் ஈஸ்ட்ரோஜன் அளவுகளில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள் இயற்கையாகவே பாலுணர்வை பாதிக்கின்றன. இந்த பிரச்னைகள் ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவாக காணப்படுகின்றன.

நீரிழிவு மருந்துகளால் ஏற்படும் பக்க விளைவுகள்

நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த மருந்துகளை உட்கொள்வது தான் ஒரே வழி என்று பலரும் கருதுகின்றனர். அவர்களில் ஒரு தரப்பினருக்கு மருந்துகளின் பக்க விளைவுகளாக ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படுகின்றன. இது அவர்களின் பாலுணர்வை பாதிக்கலாம். எனவே, சர்க்கரை நோய்க்கு மட்டுமின்றி, எந்த வகையான மருந்துகளை உட்கொண்டாலும், உடலில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் ஆரோக்கியத்தில் ஏற்படும் மாற்றங்களை, மருத்துவரிடம் தெரிவித்து, தீர்வு காண்பது முக்கியம்.
 

உணர்வு நிலைகளில் ஏற்படும் மாற்றங்கள்

நீரிழிவு நோயாளிகளுக்கு அதன் அளவு மற்றும் தீவிரத்தன்மையைப் பொறுத்து உணர்வு நிலைகள் பாதிக்கப்படலாம். இது காலப்போக்கில் செக்ஸ் டிரைவும் பாதிக்கப்படக்கூடும். இதேபோல், சில நீரிழிவு நோயாளிகளில், இன்சுலின் ஊசி போட்டுக்கொள்ள நேரிடுகிறது. இதன் காரணமாகவும் உடலுறவு இன்பம் அனுபவிப்பது தலையிடுகிறது. இது நோயாளிகளின் மனநிலையையும் பாதித்துவிடுகிறது.
 

சிகிச்சை முறை மட்டுமே தீர்வு

நீரிழிவு நோயாளிகள் தங்கள் பாலியல் வாழ்க்கை பாதிக்கப்படுவதைக் கண்டால் உடனடியாக சிகிச்சை அளிக்கும் மருத்துவரை அணுக வேண்டும். எல்லா நீரிழிவு நோயாளிகளுக்கும் இந்தப் பிரச்சனை இருக்காது என்பதையும் புரிந்து கொள்ளுங்கள். நீரிழிவு பாதிப்பை பாலுணர்வை பாதித்தாலும், சிகிச்சை மற்றும் வாழ்க்கை முறை மேம்பாடுகள் மூலம் மட்டுமே அதை தீர்க்க முடியும்.
 

click me!