பெண்கள் உடலுறவை தவிர்ப்பதற்கான 5 காரணங்கள்..!!

First Published | Feb 22, 2023, 1:31 PM IST

பெரும்பாலான பெண்களுக்கு உடலுறவு அவர்களுடைய விருப்பப்படி நடப்பது கிடையாது. ஆண்களின் விருப்பத்தின் பேரில் தான் உடலுறவு சார்ந்த மகிழ்ச்சி அமைகிறது. இதுவே பெண்களுக்கு பாலுறவு மீதான ஈர்ப்பு குறைவதற்கு முதன்மை காரணமாகிவிடுகிறது. 
 

பாலுறவில் பெண்களுக்கு புதுமை தேவைப்படுகிறது. அது ஒவ்வொரு முறையும் ஒரே மாதிரியாக இருந்தால், அவர்களுக்கு எளிதில் சலித்து போகிறது. பெண்களுக்கு உடலுறவு தரும் இன்பத்தில் மசாலா அல்லது வேறு ஏதேனும் மாறுபாடு இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர். இன்னும் நமது சமூகத்தில் இருவருக்கும் ஏகபோகமான இன்பம் கிடைக்க வேண்டும் என்று நினைப்பது கனவாக உள்ளது. குறிப்பாக பெண்கள் இதை பேசவே கூடாது என்கிற சூழ்நிலையும் நிலவுகிறது. பல பெண்களுக்கு ரோல்-பிளேமிங், செக்ஸ் கேம்கள் போன்றவற்றை தங்களுடைய பாலுறவு இன்பத்தில் சேர்க்க வேண்டும் என்கிற ஆர்வம் உள்ளது என ஆய்வில் தெரியவந்துள்ளது.
 

இதை முதலில் தெரிந்துகொள்ளவும்

பெண்களுக்கு ஒத்துப்போகாத அல்லது சம்மதமில்லாத சூழலில் ஆண்கள் உடலுறவில் ஈடுபடுவது திருப்தி தராமல் போக அதிக வாய்ப்புள்ளது. அது தவிர, ஒரு பெண் உடலுறவை தவிர்ப்பதற்கு வேறு சில காரணங்களும் உள்ளன. அவை உணர்வு தொடர்பான அல்லது உடல் ரீதியான காரணங்களாகவும் இருக்கலாம். இவை அனைத்தையும் விட, ஒரு ஆண் தன்னிடம் எப்படி உறவை வளர்க்கிறான் என்பதை  பெண்கள் புரிந்துகொள்வது பொறுத்து உடலுறவு வலுபடுகிறது.
 


தவறான செக்ஸ் புரிதல்கள்

நம் பண்பாட்டில் உடலுறவு என்பது ஆண்களின் விருப்பதின் பேரில் தான் நடைபெறுகிறது. அங்கு பெண்களின் விருப்பத்துக்கும் உரிமைக்கும் இடமில்லை. ஆண்களை பின்பற்றியே பெண்கள் படுக்கை அறையில் நடந்துகொள்ள வேண்டிய அழுத்தம் உள்ளது. சில சமயங்களில் ஆணால் சிறப்பாக செயல்பட முடியாமல் போகும் போது, பாலியல் இன்பம் பெறும் பெண்ணுக்கும் அதிருப்தி ஏற்படுகிறது. இது தொடரும் பட்சத்தில் பெண்கள் இயல்பாக உடலுறவின் மீதான ஆர்வத்தை இழந்துவிடுகின்றனர். இது ஒரு பொதுவான பிரச்னையாக இருந்தாலும், எந்த ஆணும் இதை ஏற்றுக்கொள்வது கிடையாது. 

மன அழுத்தம் 

குறைந்த லிபிடோவுக்கு மன அழுத்தம் ஒரு முக்கிய காரணமாக உள்ளது. நீங்கள் உணர்ச்சி ரீதியாக மோசமான இடத்தில் இருக்கும் போது, உங்களுக்குள் மன அழுத்த பெரும் சுமையாக இருக்கும். இதனால் உங்களுக்கு உடலுறவின் மீது ஈர்ப்பு ஏற்படாது. அப்போது உங்களை நீங்கள் விடுவித்துக் கொள்வது மிகவும் முக்கியம். உங்கள் மன அழுத்ததுக்கு பணிச்சுமை காரணமாக இருந்தால், கொஞ்சம் விடுமுறை எடுத்துக்கொள்ளுங்கள். அப்போது உங்களுடைய செக்ஸ் டிரைவை மாற்ற முயற்சிகள் மேற்கொள்வது, மன அழுத்தத்தைத் தணிக்க உதவும். இதுதவிர பல்வேறு வழிகளை நாட வேண்டியதை குறித்தும் சிந்தியுங்கள்.

வலியும் வேதனையும்

உடலுறவின் போது வேதனை இருந்தால், ஏதோ தவறு என்று அர்த்தம். வலிமிகுந்த உடலுறவுக்கான சில பொதுவான காரணங்களில் இடுப்புத் தளச் செயலிழப்பும் அடங்கும். இது இடுப்பின் அடிப்பகுதியில் உள்ள தசைகள் ஓய்வெடுக்காதபோது நிகழ்கிறது. மற்றொன்று ஹார்மோன் மாற்றங்கள், இதில் டெஸ்டோஸ்டிரோன் மற்றும் ஈஸ்ட்ரோஜன் அளவுகள் வலிமிகுந்த உடலுறவுக்கு வழிவகுக்கும். எனவே உடலுறவின் போது உங்களுக்கு வலி ஏற்படும் போது  மருத்துவரை அணுகுவது நல்லது.

பெர்ஃப்யூமின் முழு பயன்பாடும் கிடைக்க இதைச் செய்தால் போதும்..!!

உளவியல் காரணங்கள்

அதிக கவலை அல்லது மனச்சோர்வு இருக்கும்போது, செக்ஸ் டிரைவில் நேரடி தாக்கம் இருக்கும். உறவுச் சிக்கல்களுக்கு பெரும்பாலும் குடும்பச் சூழல் பின்னணியில் உள்ளன. மேலும் சில சந்தர்ப்பங்களில் பாலியல் அதிர்ச்சியின் வரலாறு இருந்திருந்தால், அது உங்கள் உடலுறவில் ஆர்வத்தை நிச்சயமாக பாதிக்கும். உங்களுக்கு அதிக வியர்வை அல்லது வாய் துர்நாற்றம் இருந்தால், யாரும் அதை விரும்ப மாட்டார்கள். அதில் பெண்களும் அடங்குவர். ஒருவர் உங்களை எவ்வளவு நேசித்தாலும், இதை ஏற்றுக்கொண்டு உடலுறவின் ஈடுபடுவார்கள் என்று எதிர்பார்க்கக்கூடாது.

Latest Videos

click me!