இன்றைய காலகட்டத்தில் பணத் தேவை மிகவும் முக்கியமான ஒன்றாக காணப்படுகிறது. ஏனெனில், பணம் இல்லாமல் எதையுமே நம்மால் செய்ய முடியாது என்ற நிலையில் தான் உள்ளோம். பணம் முக்கியம் தான். ஆனால், அதை விட முக்கியமானது நமது உடல் ஆரோக்கியம். பணம் சம்பாதிப்பதற்காக பல மணி நேரத்தை செலவிடுகிறோம். ஆனால், ஆரோக்கியத்தை காக்க பலரும் எதையும் செய்யவில்லை.
இரவு நேர வேலை
விலைவாசி உயர்வு, குடும்பச் சூழல் மற்றும் எதிர்காலத்தை குறித்த பயம் போன்ற பல காரணங்கள் மக்களை நேரம் காலம் பார்க்காமலும், இரவு பகல் என்று நினைக்காமலும் வேலை செய்ய வைக்கிறது. பகலில் வேலை செய்வது என்பது மிகவும் இயல்பான ஒன்று தான். இதனால் உடல் நலப் பிரச்சனைகள் வருவது மிகவும் குறைவு. ஆனால், இரவு நேரத்தில் வேலை செய்பவர்களுக்கு உடல் நலக் கோளாறுகள் மற்றும் மன ரீதியான கோளாறுகள் போன்ற பாதிப்புகள் அதிகமாகவே ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது. தொடர்ந்து இரவு நேரத்தில் வேலை செய்வதால் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன என்பதை இப்போது காண்போம்.
மார்பக புற்றுநோய்
இரவு நேரத்தில் வேலை செய்யும் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் வரும் அபாயம் அதிகமாக உள்ளது.
உடல் சோர்வு
இரவு நேர வேலையால் மனதில் எதிர்மறையான ஆற்றல்கள் வெளிப்படும். இதன் காரணமாக உடலும், மனமும் சோர்வடைந்து விடும்.
தூக்கமின்மை
என்ன தான் இருந்தாலும் இரவில் தூங்குவதைப் போல் பகலில் ஆழ்ந்த தூக்கத்திற்கு செல்ல முடியாது. இதனால், கண் எரிச்சல் உண்டாகும்.
குடல் பிரச்சினை
இரவில் வேலை செய்வதனால் அல்சர், இரைப்பை மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.
இது போன்ற பல உடல்நலம் தொடர்பான பிரச்சனைகள் இரவு நேரம் வேலை செய்வதால் ஏற்படுகிறது. இதனைத் தவிர்த்துக் கொள்ள ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட வேண்டும்; பகலில் ஆழ்ந்த தூக்கத்திற்கு செல்ல வேண்டும்; அதிகமான தண்ணீர் குடிக்க வேண்டும்; எண்ணெய் உணவுகளை தவிர்க்க வேண்டும்; இது போன்ற செயற்பாடுகளை செய்வதன் உடல் நலனைப் பாதுகாத்துக் கொள்ள முடியும்.