ஆண்கள் தங்கள் வலியை ஒருபோதும் வெளிப்படுத்த மாட்டார்கள்... பார்த்திருக்கிறீர்களா...அது ஏன் தெரியுமா??

First Published | Sep 1, 2023, 9:23 PM IST

பொதுவாக பெண்கள் தங்கள் எண்ணங்களை அனைவரிடமும் பகிர்ந்து கொள்வார்கள். ஆனால், ஆண்கள் அப்படி செய்வதில்லை. இதற்கான காரணங்கள் என்ன என்று இங்கு பார்க்கலாம்.

ஒரு நபர் தனது உணர்வுகளை மற்றவர்களிடம் அதிகமாக பகிர்ந்து கொண்டால் பலவீனமானவர் என்று கூறப்படுகிறது. எனவே, ஒவ்வொருவரும் தன்னை வலிமையாக நிரூபிப்பதற்காக தனது வார்த்தைகளை தனக்குள்ளேயே வைத்துக் கொள்கிறார்கள். தன் விஷயங்களை யாரிடமும் சொல்வதில்லை. எனவே, ஆண்கள் மனம் விட்டு பேசாததற்கான காரணங்களை குறித்து இங்கு பார்க்கலாம்.

பிறர் பற்றி எண்ணம்: பொதுவாகவே ஆண்கள் என்றால் வலிமையானவர்கள் தான். ஆரம்பத்திலிருந்தே அவர்கள் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தாமல் பழகியுள்ளனர். குறிப்பாக அவர்கள் வலிமையானவர்களாக சித்தரிக்கப்படுவதால், தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த மாட்டார்கள். ஏனெனில் பிறர் என்ன நினைப்பார்கள் எண்ணம் அவர்களிடம் இருக்கும். அதனால்தான் அவர்கள் மற்றவர்களிடம் சொல்ல மாட்டார்கள், ஆனால் வருத்தப்படுவார்கள்.

இதையும் படிங்க:  வயது மூத்த பெண்கள் மீது ஆண்கள் ஏன் மோகம் கொள்கிறார்கள்?

Latest Videos


கேவலமாக பார்க்கப்படுவோமோ: அவர்கள் தங்கள் எண்ணங்களை மற்றவர்கள் முன் பேசினால், இதனால் அவர்கள் கேவலமாக பார்க்கப்படுவார்கள், புண்படுத்தப்படுவார்கள் என்று நினைப்பார்கள். எனவே, அவர்கள் தங்கள் கதைகளை சொல்ல பயப்படுகிறார்கள். 

ஆண்கள் சுதந்திரமாக பேசினால் கிடைக்கும் பலன்: உங்கள் உணர்வுகளைப் பற்றி மற்றவர்களிடம் பேசுவது மன அழுத்தத்தைக் குறைக்கும். உணர்வுகளை மகிழ்ச்சியாக வெளிப்படுத்தினால் மனச்சோர்வு, மன உளைச்சல் குறையும்.. அதுமட்டுமல்லாமல் மற்றவர்களிடம் உணர்வுகளை வெளிப்படுத்தும் போது,   வாழ்வில் உள்ள அனைத்து உறவுகளும் வலுப்பெறும் தன்னம்பிக்கையும் கிடைக்கும்.

இதையும் படிங்க: கொரியர்கள் ஏன் எப்போதும் மொழு மொழுன்னு இருக்காங்க.. தாடி வளராதா? காரணம் இதோ..!!

விழிப்புணர்வு அவசியம்: மனநலம் மற்றும் உணர்ச்சிகளைப் பற்றி வெளிப்படையாகப் பேச ஆண்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியம்.  மேலும் உங்கள் எண்ணங்களை நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பகிர்ந்து கொள்வது முக்கியம்.

click me!