
வீட்டிலேயே ஹோட்டல் சுவையில், மணக்க மணக்க ஒரு பிரியாணி செய்து சாப்பிட ஆசையா? வழக்கமாக சிக்கன், மட்டன் பிரியாணி செய்து சாப்பிடுபவர்களுக்கு வித்தியாசமான சுவையில் காளான் பிரியாணி ஒரு சிறந்த தேர்வாக இருக்கும்.
அதிலும், கொங்குநாடு சமையல் பாணியில் சீரக சம்பா அரிசி, நறுமண மசாலாக்கள், சின்ன வெங்காயம், புதினா, கொத்தமல்லி என ஒவ்வொன்றும் சேரும்போது அதன் வாசனையே சாப்பிடத் தூண்டும்.
காளானின் மென்மையான தன்மையும், சீரக சம்பா அரிசியின் தனித்துவமான மணமும், பட்டை, கிராம்பு, ஏலக்காய் போன்ற மசாலாக்களின் சுவையும் இணைந்து இந்தப் பிரியாணியை அசத்தலாக மாற்றும்.
வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே சுலபமாகச் செய்யக்கூடிய இந்தக் கொங்குநாடு ஸ்டைல் காளான் பிரியாணியை, மதிய உணவாகவோ அல்லது வீட்டுக்கு வரும் விருந்தினர்களுக்காகவோ செய்து அசத்தலாம்.
அப்படி சுவையான இந்த காளான் பிரியாணியைச் செய்வதற்குத் தேவையான பொருட்கள் என்னென்ன? அதன் செய்முறை என்ன? என்பதை விரிவாகப் பார்ப்போம்.
முக்கியப் பொருட்கள்
அரைக்கத் தேவையான பொருட்கள்
தாளிக்கத் தேவையான பொருட்கள்
அரிசியை ஊறவைக்கவும்
சீரக சம்பா அரிசியை 2 -3 முறை நன்றாகக் கழுவி, சுமார் 20 - 30 நிமிடங்கள் தண்ணீரில் ஊறவைக்கவும். பின்னர் தண்ணீரை முழுவதுமாக வடித்துவிட்டு தனியாக வைக்கவும்.
மசாலாவை அரைக்கவும்
சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, சோம்பு, பட்டை, ஏலக்காய், கிராம்பு, அன்னாசிப்பூ, ஜாதிப்பத்திரி, மராட்டி மொக்கு, கல்பாசி ஆகியவற்றை மிக்ஸியில் சேர்த்து சிறிதளவு தண்ணீர் தெளித்து நன்றாக அரைத்துக்கொள்ளவும்.
காளானைத் தயார் செய்யவும்
காளானைச் சுத்தம் செய்து, தேவையான அளவில் நறுக்கிக்கொள்ளவும். அதிக நேரம் தண்ணீரில் ஊறவைக்காமல் கழுவி வடித்துக்கொள்வது நல்லது.
வெங்காயம், தக்காளியை வதக்கவும்
அடிகனமான பாத்திரம் அல்லது குக்கரில் எண்ணெய், நெய் சேர்த்துச் சூடாக்கவும். பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்துத் தாளிக்கவும். பின்னர் முந்திரியைச் சேர்த்து லேசாக வறுக்கவும்.
பின்னர் நறுக்கிய பெரிய வெங்காயத்தைச் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும். அதன் பிறகு தக்காளியைச் சேர்த்து குழையும்வரை வதக்கவும்.
அரைத்த மசாலா, காளான் சேர்க்கவும்
இப்போது அரைத்து வைத்த மசாலாவைச் சேர்த்து, அதன் பச்சை வாசனை போகும் வரை நன்றாக வதக்கவும். பின்னர் காளான், புதினா, கொத்தமல்லி இலைகள், உப்பு ஆகியவற்றைச் சேர்த்து 3 - 5 நிமிடங்கள் வதக்கவும். காளானிலிருந்து தண்ணீர் வெளிவரும் என்பதால், மசாலா அடிபிடிக்காமல் கிளறிக்கொண்டிருக்கவும்.
அரிசி, தண்ணீர் சேர்க்கவும்
ஊறவைத்து வடித்த சீரக சம்பா அரிசியைச் சேர்த்து மெதுவாகக் கிளறவும். எலுமிச்சைச் சாற்றையும் சேர்க்கவும். பின்னர் சுமார் 3 கப் சூடான தண்ணீரை ஊற்றி, உப்பைச் சரிபார்க்கவும்.
அரிசியின் தரம், ஊறவைத்த நேரம், காளானிலிருந்து வெளிவரும் ஈரப்பதம் ஆகியவற்றைப் பொறுத்துத் தண்ணீரின் அளவைச் சிறிது மாற்றிக்கொள்ளலாம்.
பிரியாணியை வேகவைக்கவும்
குக்கரில்: தண்ணீர் கொதித்ததும் மூடியைப் போட்டு, மிதமான தீயில் சுமார் 1 விசில் வரும்வரை வேகவைக்கவும். பின்னர் குறைந்த தீயில் 5 நிமிடங்கள் வைத்துவிட்டு அடுப்பை அணைக்கவும். அழுத்தம் தானாக இறங்கிய பிறகு திறக்கவும்.
பாத்திரத்தில்: மூடி போட்டு, குறைந்த தீயில் அரிசி நன்றாக வேகும்வரை சுமார் 15 - 20 நிமிடங்கள் சமைக்கவும். தேவைக்கேற்ப நேரத்தை மாற்றவும்.
இறுதியில் சாதத்தை உடையாமல் மெதுவாகக் கிளறினால், மணமணக்கும் கொங்குநாடு ஸ்டைல் காளான் பிரியாணி தயார்.
காளான் பிரியாணியின் சுவையை அதிகரிக்க சில குறிப்புகள்
சீரக சம்பா அரிசி: பிரியாணிக்கு இந்த அரிசி தனித்துவமான மணத்தையும் சுவையையும் தரும்.
சின்ன வெங்காயம்: அரைத்த மசாலாவில் சின்ன வெங்காயம் சேர்ப்பது சுவையை மேம்படுத்தும்.
கல்பாசி, மராட்டி மொக்கு: இவை கொங்குநாடு பாணி மசாலாவின் நறுமணத்துக்கு உதவும். அளவுக்கு அதிகமாகச் சேர்க்க வேண்டாம்.
காளானை அதிக நேரம் வேகவைக்க வேண்டாம்: அதிகமாக வேகினால் காளான் மென்மையாகி அதன் வடிவம் மாறலாம்.
தண்ணீரின் அளவு: அரிசி ஊறியிருப்பதையும் காளானிலிருந்து தண்ணீர் வெளிவருவதையும் கணக்கில் கொண்டு அளவிடவும்.
எதனுடன் பரிமாறலாம்?
இந்தக் காளான் பிரியாணியுடன் வெங்காய ரைத்தா, கத்தரிக்காய் தொக்கு , கத்திரிக்காய் குழம்பு போன்றவற்றைப் பரிமாறலாம். அப்பளம் அல்லது வெள்ளரிக்காய் ரைத்தாவும் நல்ல சேர்க்கையாக இருக்கும்.