திமுக கூட்டணியில் சேர மாட்டோம் என யார் சொன்னது? அரசியலில் எதுவும் நடக்கலாம்.. பாஜகவை அலறவிட்ட ஜான் பாண்டியன்.!

Published : Nov 16, 2023, 07:18 AM ISTUpdated : Nov 16, 2023, 07:20 AM IST

நாங்கள் தேசிய ஜனநாயக கூட்டணியிலும் இல்லை, அதிமுக கூட்டணியிலும் இல்லை என தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான் பாண்டியன் தெரிவித்துள்ளார்.

PREV
14
திமுக கூட்டணியில் சேர மாட்டோம் என யார் சொன்னது? அரசியலில் எதுவும் நடக்கலாம்.. பாஜகவை அலறவிட்ட ஜான் பாண்டியன்.!

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான் பாண்டியன் இடம் பெற்றிருந்தார். அண்மையில் டெல்லியில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் கூட்டத்தில் ஜான் பாண்டியன் கலந்து கொண்டார். இந்நிலையில், திடீரென தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக விலகி தமிழக அரசியலில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

24

இந்நிலையில், நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையில் புதிய கூட்டணி அமைத்து போட்டியிட டிடிவி.தினகரன், ஓபிஎஸ், பாமக, ஜி.கே.வாசன், புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட கட்சிகளுடன் ரகசிய பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியானது. 

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this linkhttps://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

34

இந்நிலையில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான் பாண்டியன் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;-  தேசிய ஜனநாயக கூட்டணிலும் இல்லை. அதிமுக கூட்டணியிலும் இல்லை.

44

பாஜகவும், அதிமுகவும் ஒருவருக்கொருவர் விமர்சனம் செய்யவில்லை. இருவரும் ஒன்றிணைந்தால் மகிழ்ச்சி. அரசியலில் எதுவும் நடக்கலாம். நாங்கள் திமுக கூட்டணியில் சேர மாட்டோம் என யார் சொன்னது? என கேள்வி எழுப்பினார். கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் அறிவிப்போம் என  ஜான் பாண்டியன் கூறி பாஜகவுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார். 

Read more Photos on
click me!

Recommended Stories