Kundrathur Abirami: குன்றத்தூர் அபிராமியை நினைவிருக்கா? வழக்கின் நிலை என்ன? தீர்ப்பு எப்போது?

Kundrathur Abirami: சென்னை குன்றத்தூரைச் சேர்ந்த அபிராமி, கள்ளக்காதலுக்காக தனது இரண்டு குழந்தைகளையும் கொடூரமாகக் கொன்ற வழக்கில் தீர்ப்பு எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வழக்கு 7 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.

Kundrathur Abirami Family

சென்னை குன்றத்தூர் அபிராமியை தெரியாதவர்கள் யாருமே இருக்க முடியாது. அந்த அளவுக்கு மிகவும் கள்ளக்காதலுக்காக பெற்ற குழந்தையை கொடூரமான கொலை செய்து தமிழ்நாட்டை அதிர வைத்தார். அவர் தொடர்பான செய்தியை விரிவாக பார்ப்போம். சென்னை குன்றத்தூர் அடுத்த மூன்றாம் கட்டளை பகுதியை சேர்ந்தவர் அபிராமி . டிக்டாக் செயலி மூலம் பிரபலமானர். இவரது கணவர் விஜய். தனியார் வங்கி ஒன்றில் பணியாற்றி வந்தார். இந்த தம்பதிக்கு அஜய் என்ற மகனும், கார்னிகா என்ற பெண் குழந்தையும் இருந்தனர். இவர்களது வாழ்க்கை சந்தோஷமாக சென்றுக்கொண்டிருந்தது. 

Kundrathur Abirami illegal love

இந்நிலையில், அபிராமி தன் பகுதியில் இருந்த பிரியாணிக் கடைக்கு அடிக்கடி பிரியாணி வாங்கி சாப்பிட்டு வந்தார். அப்போது பிரியாணி கடையில் பணியாற்றி வந்த சுந்தரத்துடன் அபிராமிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும்  இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது. கணவர் வேலைக்கு சென்ற நேரத்தில் அடிக்கடி இருவரும் தனிமையில் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். 


Kundrathur Abirami killed children

இந்த விவகாரம் நாளடைவில் கணவருக்கு தெரியவந்ததை அடுத்து தம்பதிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் கள்ளக்காதலன் சுந்தரத்தை பார்க்க முடியாமல் பேச முடியாமலும் தவித்து வந்தார். இந்நிலையில், கணவனை கைவிட்டுவிட்டு, சுந்தரத்துடன் சேர்ந்து வாழ முடிவெடுத்தார். குழந்தைகளை காரணம் காட்டி சுந்தரத்தை பிரித்துவிட்டால் என்ன செய்வது என்ற அச்சம் அபிராமிக்கு ஏற்பட்டது.

Kundrathur Abirami Case

இதனால் கடந்த 2018ம் ஆண்டு கள்ளக்காதல் விவகாரத்தில் தனது 2 குழந்தைகளையும் பாலில் தூக்க மாத்திரை கொடுத்தும், தலையணையால் அமுக்கியும் கொடூரமான முறையில் கொலை செய்தார். ஆனால், இதில் கணவர் அதிஷ்டவசமாக உயிர் தப்பினார். மறுநாள் காலையில் குழந்தைகளை கணவர் எழுப்ப சென்ற போது குழந்தைகளை தூக்கட்டும் எழுப்ப வேண்டாம் என்று கூறியதால் வேலைக்கு சென்றுவிட்டார். பின்னர் கள்ளக்காதலனுடன் அபிராமி அங்கிருந்து கிளப்பினார். 

Kundrathur Abirami Arrest

பின்னர் அலுவலகம் முடிந்து வீட்டிற்கு வந்து பார்த்த விஜய் குழந்தைகள் கொலை செய்யப்பட்டதை அறிந்து அலறி கூச்சலிட்ட படியே போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதனையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அபிராமியை தேடிவந்தனர். அப்போது கள்ளக்காதலன் சுந்தரத்துடன் தப்பி செல்ல முயன்ற அபிராமியை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். 

Kundrathur Abirami Judgment

இதுதொடர்பான வழக்கு சுமார் 7 ஆண்டுகளாக செங்கல்பட்டு  மகிளா நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது. வழக்கில் அபிராமியின் உறவினர்கள் உட்பட 22 பேர் சாட்சியங்களாக சேர்க்கப்பட்டு அவரிடம் விசாரணை நடைபெற்றுள்ளது. ஆகையால், இந்த வழக்கு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதால் விரைவில் தீர்ப்பு வெளியாக வாய்ப்புள்ளதாகவே கூறப்படுகிறது. அபிராமிக்கு கொடுக்குப்படும் தண்டனை இதுபோன்ற பெண்களுக்கு ஒருபாடமாக அமையும். 

Latest Videos

click me!