14 ஆண்டுகளுக்கு பின் தன்னுடைய கோட்டைக்கு செல்லும் விஜய்... தளபதியை தடபுடலாக வரவேற்க தயாராகும் ரசிகர்கள்

Published : Mar 17, 2024, 10:32 AM IST

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் கோட் படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்புக்கு தயாராகி வரும் தளபதியை வரவேற்க ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.

PREV
14
14 ஆண்டுகளுக்கு பின் தன்னுடைய கோட்டைக்கு செல்லும் விஜய்... தளபதியை தடபுடலாக வரவேற்க தயாராகும் ரசிகர்கள்
Vijay

நடிகர் விஜய் நடிக்கும் கோட் திரைப்படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார். இப்படத்தில் நடிகர் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக மீனாட்சி செளத்ரி மற்றும் சினேகா நடிக்க, வைபவ், பிரபுதேவா, பிரசாந்த், நிதின் சத்யா, பிரேம்ஜி, லைலா, அஜ்மல், மைக் மோகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். கோட் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

24
GOAT movie Shooting

சயின்ஸ் பிக்சன் கதையம்சம் கொண்ட படமாக கோட் தயாராகி வருகிறது. இப்படத்தில் நடிகை திரிஷாவும் கேமியோ ரோலில் நடிக்கிறார். அவர் விஜய்யுடன் ஒரு பாடலுக்கு நடனமாட உள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. ஏப்ரல் மாதத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்து விடும் என கூறப்படுகிறது. தற்போது கோட் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது.

இதையும் படியுங்கள்... Vijay Antony: இயேசுவை பற்றி தவறாக சித்தரித்தேனா? விஜய் ஆண்டனி கொடுத்த விளக்கம்!

34
Vijay Visit Kerala

அதன்படி கோட் திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பை கேரளாவில் நடத்த உள்ளார்களாம். அங்கு 15 நாட்கள் ஷூட்டிங் நடத்த திட்டமிட்டு இருக்கிறாராம் வெங்கட் பிரபு. கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள ஸ்டேடியத்தில் தான் கோட் பட ஷூட்டிங் நடைபெற உள்ளதாம். இதில் கலந்துகொள்வதற்காக நடிகர் விஜய் கேரளா செல்ல உள்ளாராம். இதற்கு முன் கடந்த 2010-ம் ஆண்டு காவலன் பட ஷூட்டிங்கிற்காக கேரளா சென்றிருந்த விஜய், அதன்பின் 14 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் அங்கு செல்ல இருக்கிறார்.

44
GOAT Shooting in Kerala

நடிகர் விஜய்க்கு கேரளாவில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. விஜய் படம் ரிலீஸ் ஆனால் அங்குள்ள முன்னணி நடிகர்களே அதற்கு போட்டியாக தங்கள் படங்களை வெளியிட தயங்குவார்கள், அந்த அளவுக்கு கேரளாவில் விஜய்க்கு கிரேஸ் உண்டு. இதனால் பாக்ஸ் ஆபிஸிலும் கேரளா விஜய்யின் கோட்டையாகவே திகழ்ந்து வருகிறது. நடிகர் விஜய் 14 ஆண்டுகளுக்கு பின் கேரளா வருவதால் அவரை வரவேற்க ரசிகர்கள் தடபுடலாக ரெடியாகி வருகிறார்கள். வருகிற மார்ச் 18-ந் தேதி முதல் கேரளாவில் கோட் ஷூட்டிங் நடைபெற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படியுங்கள்... பிக்பாஸ் டூ சினிமா.. ஹீரோ, ஹீரோயினாக அறிமுகமாகும் விஷ்ணு & மாயா! அடுத்தடுத்து வந்த அப்டேட்; ஆடிப்போன ரசிகர்கள்

Read more Photos on
click me!

Recommended Stories