UK-வில் ஆங்கிலேயர்கள் ஸ்டைலில் ட்ரிங்க்ஸ் பார்ட்டியுடன் நடந்த தியா - தில்லான் ரிசப்ஷன்! அனிதா பகிர்ந்த கிளிக்!

Published : Jul 06, 2024, 01:55 PM IST

நடிகர் விஜயகுமாரின் மகள் அனிதா, UK -வில் நடந்த தன்னுடைய மகள் வெட்டிங் ரிசப்ஷன் குறித்த போட்டோஸ் சிலவற்றை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார். இந்த போட்டோஸ் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.  

PREV
110
UK-வில் ஆங்கிலேயர்கள் ஸ்டைலில் ட்ரிங்க்ஸ் பார்ட்டியுடன் நடந்த தியா - தில்லான் ரிசப்ஷன்! அனிதா பகிர்ந்த கிளிக்!

பழம்பெரும் நடிகர் விஜயகுமாரின் மகளும், நடிகர் அருண் விஜய்யின் சகோதரியான அனிதா விஜயகுமாரின் மகள் தியாவுக்கும் அவரின் காதலர் மருத்துவர் தில்லானுக்கும் பிப்ரவரி மாதம் திருமணம் நடந்தது.

210

நயதாராவுக்கு நடந்த அதே நட்சத்திர விடுதியில்.. தான் இவரின் திருமணமும் நடந்த நிலையில், இதில் கோலிவுட் திரையுலகை சேர்ந்த ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

ஆம்ஸ்ட்ராங் கொடூர படுகொலை! உடனடியாக நடவடிக்கை எடுக்க தமிழக அரசை வலியுறுத்திய கமல்ஹாசன்!

310

திருமணத்திற்கு பின்னர் முன்னர் - பின்னர் என இரண்டு முறை வெட்டிங் ரிசப்ஷனும் நடந்தது. அதே போல் விஜயகுமாரின் சொந்த ஊரில் உள்ள பண்ணையிலும், உறவினர்கள் முன்னிலையில்.. ஒருமுறை வெட்டிங் ரிசப்ஷன் நடந்தது.

410

இவர்களுக்கு திருமணம் ஆகி 5 மாதங்கள் ஆன பின்னரும் இன்னும் கொண்டாட்டங்கள் நிறைவடையாமல், 4-ஆவது முறையாக மீண்டும் UK-வில் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மத்தியில் நடந்துள்ளது.

தவறான சிகிச்சையை ஊக்குவிக்கிறார்.. சமந்தாவை ஜெயிலில் போடுங்க! மருத்துவரின் பதிவும்.. நடிகையின் விளக்கமும்!

510

தில்லான் பெற்றோர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்றாலும், அவர்கள் வசித்து வருவது லண்டனில் தான். தில்லான் தந்தை மிகப்பெரிய தொழிலதிபர் ஆவார். எனவே அங்கிருப்பவர்கள் பலரால் இந்தியா வந்து சென்னையில் நடந்த வரவேற்பில் கலந்து கொள்ள முடியாத நிலையில் இந்த ஏற்பாடு நடந்துள்ளது.

610

லண்டனில் நடந்த திருமண வரவேற்பை ஆங்கிலேயர்கள் ஸ்டைலில் ஏற்பாடு செய்திருந்தனர் தில்லான் குடும்பத்தினர். வந்தவர்களுக்கு விசேஷமாக ட்ரிங்க்ஸ் பாரதியும் நடந்துள்ளது.

கல்யாணம் முடிஞ்ச கையேடு... சட்டுபுட்டுன்னு ஹனி மூன் கிளம்பிய வரலட்சுமி - நிக்கோலாய் ஜோடி! வைரலாகும் போட்டோஸ்!

710

இதில் கலந்து கொள்ள தியாவின் குடும்பத்தினர் அனைவரும் லண்டன் சென்றனர். அங்கு எடுக்கப்பட்ட பல புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் தொடர்ந்து வெளியிட்டு வருகிறார் அனிதா விஜயகுமார்.

810

அந்த வகையில் தான் தற்போது தியா - தில்லான் வெட்டிங் ரிசப்ஷனில் குடும்பத்துடன் எடுத்து கொண்ட சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். 

தங்க ஜரி எம்ராய்டரி உடையில் ஆனந்த்.. கண்ணை பறிக்கும் அழகிய லெஹங்காவில் ராதிகா! சங்கீத் லுக் கியூட் போட்டோஸ்!

910

தியா வெள்ளை நிற உடையில் ஏஞ்சல் போல் இருக்க... தில்லான் கருப்பு நிற கோட் சூட்டில் உள்ளார். அனிதா மிகவும் மாடர்னாக தெரிந்தாலும், சேலையில் ஜொலிக்கிறார். 

1010

இதில் கலந்து கொண்ட அனைவரும் கைகளில் ஜூஸ் மற்றும் மது கோப்பைகளை வைத்துள்ளதையும் பார்க்க முடிகிறது. மேலும் இந்த வெட்டிங் ரிசப்ஷனில் கலந்து கொண்டவர்களுக்கு மது, ஸ்னாக்ஸ், சாக்லேட் போன்றவை ரிட்டர்ன் கிப்ட்டாக கொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கமல்ஹாசன், சிம்பு, உட்பட 4 நடிகர்களுக்கு ரெட் கார்டு? உண்மை என்ன... நடிகர் சங்கம் சார்பில் பரபரப்பு அறிக்கை!

Read more Photos on
click me!

Recommended Stories