Today Gold Rate in Chennai : மிரட்டும் தங்கம் விலை.. மிரளும் பொதுமக்கள்.. இன்று எவ்வளவு உயர்ந்தது தெரியுமா?

First Published | Nov 2, 2023, 9:53 AM IST

தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து  ஏற்றம், இறக்கம் கண்டு வந்த நிலையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை காணலாம்.

Today Gold Rate in Chennai on November 02 2023 tvk

தங்கம் பெண்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாகும். தென் இந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலையில் வகிக்கிறது. மேலும் தமிழ்நாட்டு பெண்களின் தங்க நகைகள் மீதான மோகம் மிகவும் அதிகம் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. இந்நிலையில், கடந்த மூன்று நாட்களாக தங்கம் விலை குறைந்து வந்த நிலையில் மீண்டும் இன்று உயர்ந்துள்ளது. 

Today Gold Rate in Chennai on November 02 2023 tvk

நேற்றைய நிலவரப்படி சவரனுக்கு ரூ.232 குறைந்து ரூ.45,488க்கு விற்பனையானது. அதேபோல், தங்கம் கிராமுக்கு  ரூ.29 குறைந்து ரூ.5,686க்கு விற்பனையானது.

Gold Rate in Tamilnadu


இன்றைய (நவம்பர் 02) நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.72 உயர்ந்து ரூ.45,560-ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.09 உயர்ந்து ரூ.5,695ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ. 6,165ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் சவரன் ரூ. 49,320ஆக விற்பனையாகிறது. 

வெள்ளி விலை 70 காசுகள் உயர்ந்து கிராம் வெள்ளி ரூ.77.70க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிலோ வெள்ளி ரூ.77,700க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Latest Videos

click me!