மிரட்டும் டெங்கு.. அலறும் பொதுமக்கள்.. காய்ச்சலால் பயிற்சி மருத்துவர் திடீர் உயிரிழப்பு..!

First Published Sep 15, 2023, 8:56 AM IST

திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த பயிற்சி பெண் மருத்துவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழகத்தில் கனமழை காரணமாக தேங்கிய நீரால் கொசுக்கள் உற்பத்தி அதிகரித்துள்ளது.  இதனால் பல மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு கிடுகிடுவென உயர்ந்து வருவதால் மக்கள் பீதி அடைந்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்னை மதுரவாயலில் 4 வயது சிறுவன் டெங்குவால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

இந்நிலையில், தமிழ்நாட்டில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக கண்காணிக்க பொது சுகாதாரத்துறை இயக்குநர் அறிவுறுத்தியுள்ளார். கடுமையான காய்ச்சல், மூட்டுவலி, கண்வலி, கடுமையான தலைவலி மற்றும் ஈறுகளில் ரத்தம் கசிதல் போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டும் என பொது சுகாதாரத்துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக பணியாற்றி வந்த கேரளாவைச் சேர்ந்த சிந்து காய்ச்சல் காரணமாக நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தார். டெங்குவால் பயிற்சி மருத்துவர் உயிரிழந்தாரா என அவரது ரத்த மாதிரி சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

click me!