சூப்பர் ஸ்டார் பட்டத்துல என்ன பெருமை இருக்கு... அது waste of time - மறைமுகமாக தலைவரை தாக்கிய தங்கலான் நாயகி

Published : Dec 19, 2023, 10:28 AM IST

சூப்பர் ஸ்டார் பட்டத்த போட்டுக்கிறதுல என்ன பெருமை இருக்கிறது என தங்கலான் பட நாயகி பார்வதி சரமாரி கேள்வி எழுப்பி உள்ளார்.

PREV
14
சூப்பர் ஸ்டார் பட்டத்துல என்ன பெருமை இருக்கு... அது waste of time - மறைமுகமாக தலைவரை தாக்கிய தங்கலான் நாயகி
Rajinikanth, parvathy

சூப்பர்ஸ்டார் பட்டம் குறித்த பஞ்சாயத்து இந்த ஆண்டு அதிகம் விவாதிக்கப்பட்ட ஒன்றாகவே உள்ளது. சூப்பர்ஸ்டார் பட்டத்துக்கு ரஜினிகாந்த் சொந்தக்காரராக இருந்தாலும், அடுத்த சூப்பர்ஸ்டார் விஜய் தான் என்று பலரும் பேசத் தொடங்கியதால் இது சர்ச்சையாக வெடித்தது. ஜெயிலர் பட ஆடியோ லாஞ்சில் கலாநிதி மாறன் பேசுகையில், 72 வயதில் ரஜினி மாதிரி நடிச்சா நீங்களும் சூப்பர்ஸ்டார் பட்டத்துக்கு சொந்தக்காரர் ஆகலாம் என சவால் விடும் வகையில் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

24
rajini, vijay

இதையடுத்து இந்த சர்ச்சைக்கு முடிவுகட்டும் வகையில் நடிகர் விஜய் லியோ சக்சஸ் மீட்டில் பேசும்போது, சூப்பர்ஸ்டார்னா அது ஒருத்தர் தான் என ரஜினிகாந்தை குறிப்பிட்டு பேசியதோடு, தான் எப்போது மக்களுக்கான தளபதியாகவே இருக்க விரும்புவதாக கூறி இருந்தார். இதனால் சூப்பர்ஸ்டார் பஞ்சாயத்து ஒருவழியாக முடிவுக்கு வந்தது. சமீபத்தில் நடிகை நயன் தாராவும் தன்னை லேடி சூப்பர்ஸ்டார் என அழைக்க வேண்டாம் என கேட்டுக்கொண்டார்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

34
nayanthara

லேடி சூப்பர்ஸ்டார் என அழைத்தால் நிறைய பேர் திட்டுவதாகவும் நயன்தாரா கூறி இருந்தார். இப்படி சூப்பர்ஸ்டார் பட்டம் பிரபலங்களுக்கு தலைவலியாக இருந்து வரும் நிலையில், பா.இரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் தங்கலான் படத்தில் ஹீரோயினாக நடித்துள்ள மலையாள நடிகை பார்வதி, சூப்பர்ஸ்டார் பட்டத்தை கடுமையாக விமர்சித்து பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.

44
Parvathy about superstar title

அதில், “சூப்பர் ஸ்டார் பட்டத்த போட்டுக்கிறதுல என்ன பெருமை இருக்கு. என்னை பொறுத்தவரை அது waste of time. சூப்பர் ஆக்டர் பட்டம் கிடைச்சா பெருமையா ஏத்துக்கலாம். சிலர் ஏன் தன்னை சூப்பர் ஸ்டார்னு பெருமையா சொல்லிக்கிறாங்கன்னு புரியல என கூறிய நடிகை பார்வதியிடம் மலையாளத்தில் சூப்பர் ஆக்டர் யார் என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பகத் பாசில், ரீமா ஆகியோரின் பெயர்களை பார்வதி கூறி இருக்கிறார். அவர் ரஜினிகாந்தை தான் இப்படி மறைமுகமாக சாடி உள்ளதாக நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... ஓவர் பில்டப் உடம்புக்கு ஆகாது.. 2023-ல் அதிக எதிர்பார்ப்புடன் ரிலீஸ் ஆகி அட்டர் பிளாப் ஆன படங்களின் லிஸ்ட் இதோ

click me!

Recommended Stories