மாஸ்டர் படத்துக்கு பின் விஜய்யும், லோகேஷ் கனகராஜும் இரண்டாவது முறையாக கூட்டணி அமைத்துள்ள திரைப்படம் லியோ. செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரித்துள்ள இப்படம் வருகிற அக்டோபர் 19-ந் தேதி திரைக்கு வர உள்ளது. இப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார். மேலும் சஞ்சய் தத், மிஷ்கின், அர்ஜுன், சாண்டி மாஸ்டர், மேத்யூ தாமஸ், பிக்பாஸ் ஜனனி, பிரியா ஆனந்த், கவுதம் மேனன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.