சென்னையில் 3 நாட்களுக்கு மதுக்கடைகள் மூடப்படும்.. மதுப்பிரியர்கள் ஷாக்..

First Published | Jan 13, 2024, 9:14 AM IST

சென்னையில் 3 நாட்களுக்கு மதுக்கடைகள் விடுமுறை அளிக்கப்படுவதாக சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இது மதுப்பிரியர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.

TASMAC Wineshop Leave

சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்டுள்ள அறிவிப்பில், “திருவள்ளுவர் தினமான வரும் 16ம் தேதி (செவ்வாய்க்கிழமை), வடலூர் ராமலிங்கர் நினைவு நாளான வரும் 25ம் தேதி (வியாழக்கிழமை) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Wineshops

மேலும் குடியரசு தினமான வரும் 26ம் தேதி (வெள்ளிக்கிழமை) ஆகிய தினங்களை முன்னிட்டு தமிழ்நாடு மதுபான சில்லரை விற்பனை (கடைகள் மற்றும் பார்கள்) விதிகள், தமிழ்நாடு மதுபானம் (உரிமம் மற்றும் அனுமதி) விதிகளின் கீழ் சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனை கடைகள் மற்றும் ஓட்டல், கிளப் உள்ளிட்ட பார்கள் அனைத்தும் கண்டிப்பாக மூடப்படும்.

Tap to resize

Tasmac Leave

அதுமட்டுமின்றி 3 நாட்களும் மதுபானம் விற்பனை செய்யக்கூடாது. மீறினால் மதுபானம் விற்பனை விதிகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று சென்னை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

வெறும் ரூ.55 ஆயிரத்தில் ஹீரோ எலக்ட்ரிக் ஸ்கூட்டர்.. லைசென்ஸ் தேவையில்லை.. உடனே முந்துங்க..

Latest Videos

click me!