பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள் அதிர்ச்சி! பாடப் புத்தகங்களின் விலை உயர்வு! எவ்வளவு தெரியுமா?

Published : Aug 13, 2024, 09:17 AM ISTUpdated : Aug 13, 2024, 09:20 AM IST

தமிழகத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான பாட புத்தங்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது பெற்றோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

PREV
13
பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள் அதிர்ச்சி! பாடப் புத்தகங்களின் விலை உயர்வு! எவ்வளவு தெரியுமா?
school tax books

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான பாடப்புத்தகங்களை தமிழ்நாடு பாடநூல் கழகம் தயாரித்து அச்சிட்டு விநியோகம் செய்து வருகிறது. இதில், அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு இந்த புத்தகங்களை விலையில்லா புத்தகங்களாக தமிழக அரசு வழங்கி வருகிறது. ஆனால் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு பாடப் புத்தங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இந்நிலையில் தமிழகத்தில் பாடப் புத்தகங்களின் விலை திடீரென உயர்த்தப்பட்டுள்ளது. 

23
school tax books

இதுதொடர்பாக தமிழ்நாடு பாடநூல் கழகம் 1 முதல் 12ம் வகுப்பு வரையிலான விலை உயர்வு பட்டியலை வெளியிட்டுள்ளது. 1ம் வகுப்பு புத்தகங்கள் ரூ.160 உயர்ந்து, ரூ.550க்கு விற்பனையாகிறது. 2ம் வகுப்பு புத்தகங்கள் ரூ.150 உயர்ந்து ரூ.530க்கு விற்பனையாகிறது. 3ம் வகுப்பு புத்தகங்கள் ரூ.190 உயர்ந்து ரூ.620க்கு விற்பனையாகிறது. 4ம் வகுப்பு புத்தகங்கள் ரூ.180 உயர்ந்து, ரூ.650க்கு விற்பனையாகிறது. 5ம் வகுப்பு புத்தகங்கள் ரூ.200 உயர்ந்து ரூ.710க்கு விற்பனையாகிறது. 6ம் வகுப்பு புத்தகங்கள் ரூ.320 உயர்ந்து ரூ.1110க்கு விற்பனையாகிறது.

இதையும் படிங்க: தொடர் விடுமுறை! சொந்த ஊருக்கு போறீங்களா? டோன்ட் டோரி! சென்னையிலிருந்து ஸ்பெஷல் பஸ்கள் எங்கெல்லாம் இயக்கம்!

33
school tax books

7ம் வகுப்பு புத்தகங்கள் ரூ.340 உயர்ந்து ரூ.1200 உயர்ந்துள்ளது. 8ம் வகுப்பு புத்தகங்கள் ரூ.310 உயர்ந்து ரூ.1000 உயர்ந்துள்ளது. 9ம் வகுப்பு புத்தகங்கள் ரூ.340 உயர்ந்து ரூ.1110க்கு விற்பனையாகிறது. 10ம் வகுப்பு புத்தகங்கள் ரூ.340 உயர்ந்து, ரூ.1130க்கு விற்பனையாகிறது. காகிதங்களின் விலை உயர்வு அச்சடிப்பதற்கான கட்டண உயர்வு உள்ளிட்ட காரணங்களால் 5 ஆண்டுகளுக்கு பின்பு உயர்த்தப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதனால் தனியார் பள்ளிகள் மாணவர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 

click me!

Recommended Stories