நாடாளுமன்ற தேர்தலில் அண்ணாமலை போட்டி? இந்த 5 தொகுதிகளில் ஏதாவது ஒன்றில்!

Published : Mar 02, 2024, 06:45 AM ISTUpdated : Mar 02, 2024, 06:49 AM IST

தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வைக்க தேசிய தலைமை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

PREV
13
நாடாளுமன்ற தேர்தலில் அண்ணாமலை போட்டி? இந்த 5 தொகுதிகளில் ஏதாவது ஒன்றில்!
PM Modi

நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளியாக உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தை மற்றும் தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வுகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். 3-வது முறையாக வெற்றி பெற்று பிரதமராக வேண்டும் என்பதில் பிரதமர் மோடி உறுதியாக இருக்கிறார். அதற்கு வலுசேர்க்கும் வகையில் 370 இடங்களை பிடிக்க வேண்டும் என இலக்கு நிர்ணயித்து பாஜக பணியாற்றி வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் வலுவான கூட்டணி அமைத்து எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என பிரதமர் மோடி தீவிரம் காட்டி வருகிறார். 

23
Parliament elections 2024

இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நாடாமன்ற தேர்தலில் போட்டியிட வைக்க தேசிய தலைமை முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் பாஜகவிற்கு வாக்கு சதவிகிதம் அதிகம் உள்ள 5 தொகுதிகளை அக்கட்சி மேலிடம் தேர்வு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இதில், கரூர், கோவை, ஈரோடு, ராமநாதபுரம் உள்ளிட்ட 5 தொகுதிகளில் ஏதாவது ஒரு தொகுதியில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையை களம் இறக்க கட்சி மேலிடம் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: இந்தியாவின் போதைப்பொருள் தலைநகராக மாறிய தமிழ்நாடு.. கிடைக்கிற கேப்பில் எல்லாம் ஆளுங்கட்சியை அலறவிடும் அண்ணாமலை

33
Annamalai

இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அண்ணாமலை: கட்சித் தலைமை தன்னை எந்த இடத்தில், எந்த தொகுதியில் போட்டியிட சொன்னாலும் நான் போட்டியிடுவேன் என்றார். அதேவேளையில், பிரசாரம் மேற்கொள்ள சொன்னால் பிரசாரம் செய்வேன். ஆனால் தன்னை பொறுத்தவரை சொந்த விருப்பம் என்று எதுவும் கிடையாது என கூறினார்.

Read more Photos on
click me!

Recommended Stories