நடிகர் மன்சூர் அலி கான் சமீபத்தில் நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சையான கருத்தை தெரிவித்து பரபரப்பை கிளப்பினார். தமிழ் சினிமாவில் பலரும் அவ்வப்போது நடிகைகள் குறித்து பேசி சர்ச்சையில் சிக்கியுள்ளனர்.
மன்சூர் அலி கான் சமீபத்திய பெட்டியில், “தற்போது உள்ள இயக்குநர்கள் கதாநாயகிகளிடம் நெருங்கி நடிக்க விடுவதில்லை. லியோ படத்தில் த்ரிஷாவை கற்பழிப்பது போன்ற காட்சி இல்லை. நடிகை த்ரிஷாவை, பழைய படங்களில் குஷ்பு, ரோஜாவை கட்டிலில் தூக்கிப்போட்டது போல, தூக்கிப்போட வாய்ப்பு கிடைக்கவில்லை” என்று பேசி சர்ச்சையை கிளப்பியுள்ளார்.
24
Cool Suresh
கூல் சுரேஷ் மன்சூர் அலி கானின் சரக்கு படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவிலேயே பெண் தொகுப்பாளினியுடன் தப்பாக நடந்துக் கொண்டார். அந்த மேடையிலேயே அந்த பெண் முறைத்த நிலையில், மன்னிப்பும் கேட்டார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
நடிகர் ரோபோ சங்கர் ஹன்சிகா குறித்து பேசிய போது, “ஹன்சிகா மெழுகு பொம்மை தான். மைதா மாவை பிசைந்து சுவரில் அடித்தால் ஒட்டிக் கொள்ளும் அது மாதிரி தான். படத்தில் ஒரு காட்சியில் ஒரு பொருளை தேடி அவர் காலை நான் தடவ வேண்டும். ஆனால் அவர் விடவில்லை” என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.
44
Radha Ravi About Nayanthara
நடிகர் ராதாரவி சினிமா நடிகைகள் குறித்து பலமுறை பேசி சர்ச்சையில் சிக்கியுள்ளார். ஒரு விழாவில் பேசிய ராதாரவி, பல முறை பலாத்கார காட்சிகளில் நடித்தது குறித்து பெருமிதமாக பேசியுள்ளார். மேலும் வில்லன் நடிகர்களை திரைப்படங்களில் இன்னும் அதிகமாக ரேப் பண்ணுங்கள் என்றும், நடிகை நயன்தாரா பற்றி பேசி சர்ச்சையில் சிக்கினார்.