நாளை முதல் பேருந்துகளில் ரூ.2,000 நோட்டு செல்லாது! அப்படி வாங்கனா நடத்துனரே பொறுப்பு..!

Published : Sep 27, 2023, 08:48 AM IST

செப்டம்பர் 28ம் தேதி முதல் அரசுப் பேருந்துகளில் பயணிகளிடமிருந்து ரூ.2000 நோட்டுகளை நடத்துநர்கள் பெறக்கூடாது என அரசு விரைவுப் போக்குவரத்து கழகம் அறிவுறுத்தியுள்ளது. 

PREV
13
நாளை முதல் பேருந்துகளில் ரூ.2,000 நோட்டு செல்லாது! அப்படி வாங்கனா நடத்துனரே பொறுப்பு..!

நாடு முழுவதும் புழக்கத்தில் உள்ள 2000 ரூபாய் நோட்டுகள் செப்டம்பர் மாதம் 30-ம் தேதிக்கு பிறகு  செல்லாது என கடந்த மே மாதம் ரிசர்வ் வங்கி அதிரடி அறிவிப்பை வெளியிட்டது. 2000 ரூபாய் நோட்டுகளை வைத்திருப்பவர்கள் வங்கியில் செலுத்தி மாற்றிக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது. 

23

5 மாதம் அவகாசம் கொடுக்கப்பட்ட நிலையில் தற்போது வரை 2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளுக்கு சென்று டெபாசிட் செய்தும் மாற்றி வருகின்றனர். இந்த சூழலில் இன்னும் 4 நாட்களில் ரிசர்வ் வங்கி கொடுத்த காலக்கெடு முடிவடைகிறது. 

33

இந்நிலையில் 2,000 ரூபாய் நோட்டுக்களை பயணிகளிடம் இருந்து நாளை (28-ம் தேதி) முதல் வாங்கக்கூடாது என்று கிளை மேலாளர்கள் மற்றும் நடத்துனர்களுக்கு அரசு விரைவு போக்குவரத்து கழகம் உத்தரவிட்டுள்ளது. மேலும் பயணிகளிடமிருந்து ரூ.2000 நோட்டுகளைப் பெற்றால், அதற்கு நடத்துனர்களே பொறுப்பு என்றும் போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories