இவர்களை தவிர மைக் மோகன், லைலா, பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், போன்ற ஏராளமான பிரபலங்கள் நடித்துள்ளனர். கூடிய விரைவில் இப்படத்தின் ஆடியோ லான்ச் குறித்த தகவல் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், தற்போது இந்த படத்தின் தமிழக உரிமையை கைப்பற்றி உள்ள நிறுவனம் குறித்த தகவலை பட குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி 'தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்' திரைப்படத்தின் தமிழக உரிமையை, ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் மிகப்பெரிய தொகைக்கு கைப்பற்றி உள்ளதாக கூறப்படுகிறது.