ஒரே நாளில் 200 கோடியை நெருங்கிய வசூல்... KGF, Leo பட சாதனை முறியடித்து பாக்ஸ் ஆபிஸை பதம் பார்த்த கல்கி 2898AD

Published : Jun 28, 2024, 07:32 AM ISTUpdated : Jun 28, 2024, 07:39 AM IST

நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், கமல்ஹாசன், தீபிகா படுகோனே நடிப்பில் வெளியாகி இருக்கும் கல்கி 2898AD திரைப்படத்தின் முதல் நாள் வசூல் நிலவரத்தை பார்க்கலாம்.

PREV
14
ஒரே நாளில் 200 கோடியை நெருங்கிய வசூல்... KGF, Leo பட சாதனை முறியடித்து பாக்ஸ் ஆபிஸை பதம் பார்த்த கல்கி 2898AD
Prabhas

பாகுபலி படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பின்னர் சாஹோ, ராதே ஷியாம், ஆதிபுருஷ் என வரிசையாக ஹாட்ரிக் தோல்வியை சந்தித்த நடிகர் பிரபாஸுக்கு கடைசியாக வெளிவந்த சலார் திரைப்படம் ஓரளவுக்கு சுமாரான வெற்றியை கொடுத்தது. அவர் எப்போது கம்பேக் கொடுப்பார் என ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்கு விருந்தாக வந்துள்ள திரைப்படம் தான் கல்கி 2898AD. பேண்டஸி திரைப்படமான இதை நாக் அஸ்வின் இயக்கி உள்ளார்.

24
Amitabh bachchan

இப்படத்தை வைஜெயந்தி மூவீஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. சுமார் 600 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள இப்படத்தில் பிரபாஸுடன் தீபிகா படுகோனே, அமிதாப் பச்சன், கமல்ஹாசன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து உள்ளார். பான் இந்தியா திரைப்படமாக உருவாகி உள்ள கல்கி 2898AD, நேற்று தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் உலகமெங்கும் ரிலீஸ் ஆனது.

இதையும் படியுங்கள்... Indian 2: ரசிகர்களுக்கு இரட்டை விருந்து - "கல்கி 2898 கிபி" படத்துடன் வெளியான "இந்தியன் 2" டிரெய்லர் !

34
kalki 2898AD Day 1 Worldwide Box Office Collection

படத்தின் முதல் பாதி மெதுவாக செல்வதாக விமர்சனம் வந்தாலும், இரண்டாம் பாதியில் படம் பட்டாசாக இருப்பதாக விமர்சகர்கள் தெரிவித்தனர். பாசிடிவ் ரிவ்யூ காரணமாக கல்கி 2898AD திரைப்படம் பாக்ஸ் ஆபிஸிலும் பட்டைய கிளப்பி இருக்கிறது. இப்படி முதல் நாளிலேயே உலகளவில் ரூ.180 கோடி வசூலை வாரிக்குவித்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதிலும் இந்தியாவில் மட்டும் இப்படம் ரூ.95 கோடி வசூலை அள்ளி இருக்கிறதாம்.

44
kalki 2898AD movie Box Office record

இதன்மூலம் முதல்நாளில் அதிக வசூல் அள்ளிய இந்திய திரைப்பட பட்டியலில் 3வது இடம் பிடித்துள்ளது கல்கி திரைப்படம். இதற்கு முன்னர் ராஜமவுலி இயக்கத்தில் ராம்சரண் நடித்த ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் ரூ.223 கோடி வசூலித்ததே சாதனையாக உள்ளது. அடுத்ததாக ரூ.217 கோடி வசூலுடன் பாகுபலி 2 திரைப்படம் இரண்டாம் இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு வெளிவந்த பிரபாஸின் சலார் முதல் நாளில் ரூ.158 கோடியும், விஜய்யின் லியோ ரூ.142.75 கோடியும் வசூலித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... முடிவுக்கு வந்த பல வருட காத்திருப்பு.. சோலோவாக வருகின்றது டாப் ஸ்டாரின் "அந்தகன்" - லேட்டஸ்ட் அப்டேட்!

Read more Photos on
click me!

Recommended Stories